இலங்கைத் தமிழர் பிரச்னையில் ஆன்மீகவாதியான ஸ்ரீரவிசங்கரின் ஈடுபாடும், பங்களிப்பும் வெளியுலகம் அறிந்ததே! அப்படியொருமுறை விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு தான் விடுத்த அழைப்பு குறித்து உரையாடுகிறார், ஸ்ரீரவிசங்கர்.
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ஸ்ரீரவிசங்கருடன் கலந்துரையாடல் நிகழ்வான சிந்தனைகள் சிம்ப்ளிஃபைடு நிகழ்ச்சியை நடத்துகிறது. இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இதில் ஸ்ரீரவிசங்கருடன் உரையாடுகிறார். இந்தப் பெருந்தொற்றுப் பரவல் காலத்தில் மனதில் அலை பாய்கின்ற வெவ்வேறு உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் சமநிலைப்படுத்தி அமைதி காண்பது குறித்து குருதேவிடம், கெளதவ் வாசுதேவ் மேனன் நுணுக்கமான கேள்விகளை கேட்டு பதில்களைப் பெறுகிறார்.
இந்த நிகழ்ச்சி செப்டம்பர் 13, ஞாயிறு காலை 11.00 மணிக்கு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகிறது. ஆயுர்வேத மருத்துவ நடைமுறைகளை பயன்படுத்துவது, தியானம், தற்கொலை சிந்தனைகளை எப்படி தடுப்பது மற்றும் மனதிலிருந்து அகற்றுவது என்பது குறித்து அவர்கள் பேசுகின்றனர்.
கோவிட் தொற்றின் தொடர்புடைய மனநல சவால்கள் மற்றும் தவறான நம்பிக்கைகள் / அவப்பெயரை கையாள்வது குறித்து தனது எண்ணத்தை மேனன் பகிர்ந்து கொள்கிறார். இத்தருணத்தில் மக்கள் நம்பிக்கை, நேர்மறையான உணர்வோடு இருப்பதோடு அனைவரையும் அரவணைத்து உட்சேர்ப்பு செய்யுமாறு ஸ்ரீரவிசங்கர் வலியுறுத்துகிறார். பெருந்தொற்று காலத்தின்போது பொறுமையே இன்றியமையாத வழிமுறை என்று உறுதியாக வலியுறுத்துகின்றனர்.
நிகழ்ச்சி புரொமோ வீடியோ ஒன்றில், ‘ராஜபக்ஷே அதிபராக இருந்தபோது பிரபாகரனை சந்தித்து அமைதி, சாந்தி வழிக்கு வருமாறு’ கூறியதாகவும் ரவிசங்கர் குறிப்பிடுகிறார். எனவே அது குறித்த தகவல்களும் பேட்டியில் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil