/tamil-ie/media/media_files/uploads/2018/07/sri-reddy-tamil-leaks-2.jpg)
sri reddy tamil leaks - ஸ்ரீ ரெட்டி வீடியோ
sri reddy tamil leaks: தெலுங்கு திரையுலகை நிலைகுலையச் செய்த ஸ்ரீ ரெட்டி புயல் தற்போது தமிழ் திரையலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.
ராகவா லாரன்ஸ் சவாலும் ஸ்ரீ ரெட்டி வெளியிட்ட வீடியோவும்:
தெலுங்கு திரையுலகைப் போலவே தமிழ் சினிமாவிலும் வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி பலரும் தன்னை பாலியல் ரீதியாக ஏமாற்றினார்கள் என்று ஸ்ரீ ரெட்டி புகார் தெரிவித்து வருகிறார். இதற்காகத் தன்னை ஏமாற்றியவர்கள் இவர்கள் தான் என்றவாறு ஒரு பட்டியலையே வெளியிட்டு வருகிறார். இப்பட்டியலில் சிக்கியுள்ள பல பிரபலங்களில் ராகவா லாரன்ஸ் பெயரும் இடம்பெற்றுள்ளது. இது குறித்து பலரும் ராகவா லாரன்ஸிடம் கேட்டு வந்ததால் அவர் தனது தரப்பு கருத்தை முகநூலில் பதிவிட்டார்.
ஸ்ரீரெட்டிக்கு ராகவா லாரன்ஸ் விட்ட சவால் பற்றி படிக்க இதை பாருங்கள்
ராகவா லாரன்ஸ் பதிவு செய்ததில், தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், யாரைக் கண்டும் அஞ்சத் தேவையில்லை என்றும் கூறியிருக்கிறார். மேலும் தன் மீது அபாண்டமாகப் பழி சுமர்த்தும் ஸ்ரீரெட்டி உண்மையிலேயே சினிமா வாய்ப்புக்காக இதைச் செய்கிறார் என்றால் ஒரு முறை நடித்துக் காட்ட வேண்டும், அப்படி நடிப்பு பிடித்திருந்தால் அந்த நேரத்திலேயே வாய்ப்பு தருவதாகவும் கூறினார்.
Sri Reddy Tamil Leaks: raghava lawrenceலாரன்ஸ் பதிவிட்டிருந்த பகீரங்க விளக்கத்தைப் படித்த ஸ்ரீ ரெட்டி, அவரின் நடிப்பு சவாலை ஏற்றுக் கொள்வதாகவும், அதன் சிறிய சேம்பிள் இது என்றும் கூறி முகநூலில் வீடியோ பதிவு செய்துள்ளார்.
என்ன வீடியோ அது என்று பரபரப்பாக முகநூல் சென்று பார்த்த நெட்டிசன்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. தற்போது அவரது முகநூலில் அவர் நடிப்பு திறனை நிரூபிப்பதாகக் கூறி பதிவிட்டுள்ள டம்ஸ்மேஷ் வீடியோ மட்டுமே உள்ளது. அவர் பதிவிட்டிருந்த யூடியூப் வீடியோ நீக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us