அரை நிர்வாண போராட்டத்தால் தெலுங்கு சினிமாவையே அதிர வைத்த நடிகை: வெளிவரும் பகீர் உண்மைகள்!

இரவு 9 மணிக்கு மேல் தான் அவரை பார்க்க முடியும் நீங்கள் சென்று விட்டு இரவு வாருங்கள் என்று என்னை அனுப்பி விடுவார்.

By: Updated: April 10, 2018, 05:09:29 PM

தமிழ்நாட்டில் சுசீ லீக்ஸ் எப்படி நமக்கு மிகவும் பிடித்த நடிகர், நடிகைகளின் உண்மை முகத்திரையை கிழித்ததோ அதே போல தான், தெலுங்கில் ஸ்ரீரெட்டி லீக்ஸ். தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

சமீப காலமாக இவருக்கு பட வாய்ப்புக்கள் ஏது வரவில்லை என்று தெரிகிறது.இந்நிலையில், ஸ்ரீ ரெட்டில் தீடீரென்று அதிர்சி தரும் தகவல் ஒன்றை பகிர்ந்தார். தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் சினிமா வாய்ப்புகள் வழங்குவதாகக் கூறி தன்னை ஏமாற்றி விட்டார் என்று கூறினார்.

பிரபல தயரிப்பாளரின் மகன் அடிக்கடி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும்,அரசுக்கு சொந்தமான ஸ்டூடியோவுக்கு அழைத்துச் சென்று என்னை பாலியல் வன்கொடுமை செய்தாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ஸ்ரீரெட்டி முன் வைத்தார்.

தன்னைப் போலவே பல பெண்களை ஏமாற்றிய நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களின் ரகசிய வீடியோக்கள், அந்தரங்க புகைப்படங்களை வெளியிடப் போவதாகவும் அவர் தெரிவித்தார். பின்னர், பிரபல தெலுங்கு டைரக்டர் சேகர் கம்முலு பற்றிய தகவலை அவர் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து,  தெலுங்கு திரையுலகைச் சார்ந்த பலரின் தகவல்களை ஸ்ரீ ரெட்டி வெளியிட்டார்.

இதற்குச் சம்பந்தப்பட்ட திரையுலகினர் உட்பட பல்வேறு தெலுங்கு திரையுலக அமைப்பிலிருந்தும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டிற்கு ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் பின்பு,  ஸ்ரீரெட்டி தெலுங்கு சினிமாவில் நடிப்பதற்கு  தடை விதிக்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீ ரெட்டி, தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும், நியாம் கிடைக்கும் வரை போராட போவதாக தெரிவித்து, ஆந்திரா திரைப்பட வர்த்தக சபை முன்பு  கடந்த சனிக்கிழமை  அரைநிர்வாணப் போராட்டத்தில் ஈடுப்பட்டார்.

ஸ்ரீ ரெட்டின்  இந்த போராட்டம்  தெலுங்கு சினிமாவையே அதிர வைத்தது. அதன் பின்பு, ஸ்ரீரெட்டியின்  இந்தச் செயலை கண்டித்து அவர்  நடிப்பதற்கான உரிமத்தினை தெலுங்கு திரையுலகம் ரத்து செய்தது.

 

https://www.youtube.com/watch?v=YdAbmpmITIg

 

அடுத்தக்கட்ட நடவடிக்கையில் ஈடுப்பட்ட, ஸ்ரீரெட்டி தனது முகநூல் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவு செய்திருந்தார். அதில், தெலுங்கானா முதல்வர்,  சந்திரசேகர ராவ்விடம் ஒரு  வேண்டுங்கோள் வைத்தார். அதில். “ முதல்வர் அவர்கள் இந்தப் பிரச்சனையை புரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் அடுத்தகட்டமாக நான் நிர்வாணமாகப் போராடுவேன். எனக்கு உங்களை வேறு எப்படி அணுக வேண்டும் என்று தெரியவில்லை” என்று தெரிவித்திருந்தார்.

அதன் பின்பு, மொத்ட்க மீடியாவின்  கவனமும் ஸ்ரீரெட்டியின் பக்கம் திரும்பியது. பிரபல ஆங்கில் நாளிதழ் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டி இதோ…

“வட இந்தியாவில் இருந்து வரும் நடிகைகள் படுக்கைக்கு உடனே செல்ல ஒப்புக் கொள்வதால்தான் தென் இந்திய சினிமாவில் வட இந்திய நடிகைகள் அதிகமாக உள்ளனர்.என்ன காரணத்திற்காக எனக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரியவில்லை. எனக்கு தடை விதிக்க அவர்களுக்கு அதிகாரம் கிடையாது. ஒரு பெண்ணாக எனது கருத்தை சுதந்திரமாக கூற உரிமை இருக்கிறது.

தெலுங்கு பட உலகில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல் தொல்லைக்கு எதிரான எனது போராட்டம் தொடரும். யாருக்கும் நான் பயப்படமாட்டேன். ‘மா’ என்னை உறுப்பினராக இணைக்க தொடர்ந்து மறுக்கிறது. உறுப்பினர் அட்டையைப் பெறுவதற்கு பலமுறை நான்  விண்ணப்பித்தேன். ஆனால் இதுவரை ’மா’ என்னை உறுப்பினராக சேர்க்கவில்லை.

தினமும்  நான் மா அலுவலகத்திற்கு வருவேன். தலைமை அலுவலரை பார்க்க நீண்ட நேரம் காத்திருப்பேன். அங்கிருக்கும் வாட்ச் மேன் ஐயா, இரவு 9 மணிக்கு மேல் தான் அவரை பார்க்க முடியும் நீங்கள் சென்று விட்டு இரவு வாருங்கள் என்று என்னை அனுப்பி விடுவார்.

நான் மீண்டும்  இரவு  அலுவலகத்திற்கு வருவேன். ஆனால் அப்போது அலுவலகமே மூடப்பட்டு இருக்கும். இப்படி நான் சந்தித்த அவமானங்கள் எராளம். ஏன்,  இந்த போராட்டத்திற்கு பிறகு, நான் குடியிருக்கும் வீட்டை கூட காலி செய்ய சொல்லிவிட்டாட்ர்கள். எனக்கு நேர்ந்த அவமானத்தை வெளியில் சொன்னது தப்பா” என்று  ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், இதுக் குறித்து பேசியுள்ள தெலுங்கு திரைப்பட நடிகர்கள் சங்கத் தலைவர் சிவாஜி ராஜா,    ”ஸ்ரீ ரெட்டியின் செயல் எங்கள் மனதை புண்படுத்தியுள்ளது. அவர் கூறும் குற்றச்சாட்டுகளில் ஒன்று கூட உண்மையில்லை. அவர் போராட்டம் நடத்துவதற்கு என்னை சந்தித்தார். நான் அவருக்கு உரிய உதவிகள் செய்வதாக கூறினேன். ஆனால் ஊடங்களில் பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காக ஸ்ரீ ரெட்டி கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

அவர்மீது நாங்கள் துறை ரீதியாக கடும் நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். அவரின் அங்கீகார அட்டையை ரத்து செய்துள்ளோம். அவருடன் எங்கள் சங்கத்தை சேர்ந்த எந்த கலைஞரும் இனி நடிக்க மாட்டார்கள். அவ்வாறு நடித்தால் அவர்களும் சங்கத்திலிருந்து நீக்கப்படுவார்கள்.” என்று தெரிவித்தூள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Sri reddy against sexual harassment

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X