Sri Reddy Clarifies controversy with udhayanidhi stalin
Sri Reddy Opens up: வாய்ப்பு தருவதாகக் கூறி, தன்னை தவறாக பயன்படுத்திக் கொண்டதாக திரைத்துறையினர் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்தார் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி. பின்னர் திடீரென்று அவர் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டது திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
Advertisment
தெலுங்கு திரையுலகில் பல முக்கிய நட்சத்திரங்களின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்த ஸ்ரீரெட்டி, அப்படியே தமிழ் பக்கமும் திரும்பினார். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸ், நடிகர் ஸ்ரீகாந்த், விஷால் உள்ளிட்டோர் மீது புகார்களைத் தெரிவித்தார். ஆனால் ஸ்ரீரெட்டி விளம்பரத்துக்காக இப்படி செய்வதாகக் கூறி சம்பந்தப்பட்டவர்கள் இப்புகார்களை மறுத்தனர்.
இந்நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி பெயரில் உள்ள பேஸ்புக் பக்கத்தில் நடிகரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பற்றிய அவதூறு பதிவு செய்யப்பட்டிருந்தது. இது குறித்து இன்று சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஸ்ரீரெட்டி, “எனக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் எந்த விதமான தொடர்பும் கிடையாது. அவரை நான் பார்த்ததும் இல்லை. என் பெயரை யாரோ தவறாக உபயோகப்படுத்துகிறார்கள். ஜெயலலிதா என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதே போல் கலைஞர் மீதும் பெரிய மரியாதை உண்டு. அவர் மகன் ஸ்டாலின் மீது மிகுந்த மரியாதை உள்ளது.
Advertisment
Advertisements
என் பெயரை தவறாக உபயோகித்து உதயநிதி ஸ்டாலினைப் பற்றி சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பி வருகிறார்கள். அது என்னுடைய பேஸ்புக் கணக்கு கிடையாது. எனது பெயரில் ஃபேஸ்புக்கில் 100-க்கும் மேற்பட்ட போலியான கணக்குகள் உள்ளன. இதுபற்றி நான் காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறேன். என் பெயரை வைத்து வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என்றார்.
அதோடு தான் அரசியலில் ஈடுபடவிருப்பதாகவும், அதுகுறித்து விரைவில் அறிவிப்பேன் என்றும் தெரிவித்தார்.