/tamil-ie/media/media_files/uploads/2019/06/Sri-Reddy-About-Ileana.jpg)
சர்ச்சைகளால் பிரபலமான நடிகை ஸ்ரீரெட்டியை, அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது.
அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டு தேசிய ஊடகங்களின் கவனத்தை ஈர்த்த இவர், திரைத்துறையில் வாய்ப்புக்காக நடிகைகள் தவறாக பயன்படுத்தப் படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார்.
கொரடலா சிவா தொடங்கி நானி வரை பல பிரபலங்கள் மீது ‘காஸ்டிங் கவுச்’ புகாரை சுமத்தினார். அதோடு நடிகர் ராணாவின் தம்பி, அபிராமுடன் தான் எடுத்துக் கொண்ட அந்தரங்க படங்களையும், இயக்குநர்களுடன் அவர் பேசிய வாட்ஸ் ஆப் உரையாடல்களையும் கூட வெளியிட்டார்.
”தெலுங்கு சினிமாவில் 90 சதவீத நடிகைகள் இயக்குநருடன் நிர்வாணமாக வீடியோ காலில் பேசும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்” என பிரபல சேனலுக்கு பேட்டியளித்த ஸ்ரீரெட்டி தெரிவித்தார். இது தெலுங்கு நடிகைகள் மற்றும் இயக்குநர்களிடத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதோடு பெரும்பாலான இயக்குநர்கள் உள்ளூர் நடிகைகளுக்கு வாய்ப்பளிக்காமல், வெளி மாநில நடிகைகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டையும் வைத்தார்.
இந்நிலையில் தற்போது தெலுங்கு இயக்குநர் தேஜா மற்றும் நடிகை இலியானா ஆகியோரை தொடர்பு படுத்தி பகீர் கிளப்பியிருக்கிறார் ஸ்ரீ. டிஸ்கஷனுக்காக இலியானாவை தாஜ் பந்த்ரா ஹோட்டலுக்கு தேஜா அழைத்ததாகவும், அவரது டாஸ்க்கை முடித்துவிட்டு, இலியானா கேமராவுக்கு செட் ஆகவில்லை என தவிர்த்ததாகவும் தன்னுடைய முகநூல் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் ஸ்ரீரெட்டி. அதோடு பார்ட் 2 விரைவில் வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் இம்முறை யார் பெயரெல்லாம் அடி பட போகிறதோ என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.