ஸ்ரீ ரெட்டிக்கு பிடித்தவர் ‘தல’தானாம்! அவரே சொல்கிறார்

Sri Reddy Tamil Leaks: ஸ்ரீ ரெட்டி தனக்கு பிடித்தமானவர்களை பட்டியல் இடுகிறார். அதில் நம்பர் 1 இடம், ‘தல’தானாம்!

ஸ்ரீ ரெட்டிக்கு பிடித்தவர் ‘தல’ அஜீத் தானாம். அவரே இதை பேட்டியில் சொல்கிறார்.

தெலுங்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கிறார்கள் எனக் கூறி ஹைதராபாத்தில் அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டவர் ஸ்ரீ ரெட்டி. இந்த போராட்டத்தின் பிறகு தெலுங்கு திரையுலகினர் பலர் தன்னை ஏமாற்றிவிட்டதாகக் கூறி அவர்களின் பெயர்களை வெளியிட்டார். இதில் அதிர்ச்சியளிக்கும் வகையில் பல பிரபலங்களில் பெயர் சிக்கியது. இதையடுத்து தற்போது தமிழ் திரைத்துறையினர் மீதும் தொடர்ச்சியான புகார்களைக் கூறி வருகிறார். அதன்படி கடந்த வாரம் முதல் அவர் வெளியிட்ட பட்டியலில் இயக்குநர் முருகதாஸ், ராகவா லாரன்ஸ் , நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட ஒரு சிலரின் பெயர்கள் இடம்பெற்றன.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு ஸ்ரீ ரெட்டி அளித்த பேட்டியில் இது குறித்து விரிவாக பேசினார். மேலும், தமிழ் இயக்குநர் முருகதாஸ் மீதான குற்றச்சாட்டுக்கு அவர் தெரிவித்த மறுப்புக்கு ஸ்ரீரெட்டி விளக்கம் அளித்துள்ளார். அதில், “தெலுங்கு தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகன் என்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டு பின்னர் ஏமாற்றினார். அதன்பிறகே தெலுங்கு திரையுலகம் குறித்த விழிப்புணர்வை பெற்றேன். தெலுங்கு திரையுலகினர் நடிகைகளை போக பொருளாக மட்டுமே பார்க்கிறார்கள். இதை அறிந்த பிறகே எதிர்த்து போராட வேண்டும் என முடிவு செய்தேன். இதற்காக எதையும் இழக்க நான் தயாராக உள்ளேன்.

அரை நிர்வாண போராட்டத்தை நடத்திய போதே உலகளவில் எனக்கு வெளிச்சம் கிடைத்தது. இனியும் நான் விளம்பரத்திற்காக இதை செய்கிறேன் என சொல்வதை ஏற்க முடியாது. ஒரு வார புகழ் வெளிச்சத்துக்காக என் வாழ்வை பணையம் வைக்க மாட்டேன்.” என்றார்.

பின்னர், இயக்குநர் முருகதாஸ் பற்றி கூறுகையில், “நான்கு வருடங்களுக்கு முன்பு இயக்குனர் முருகதாஸ் எனக்கு வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றினார். மீடியா முன்பு முருகதாஸ் என்னை தெரியாது என்றாலும் அவர் மனசாட்சிக்கு தெரியும்.” என்று பகீரங்கமாக தெரிவித்தார்.

மேலும் தமிழ்சினிமாவில் தனக்கு பிடித்தவர்களின் பட்டியலை வெளியிட்ட ஸ்ரீரெட்டி, இயக்குநர்களில் கார்த்திக் சுப்புராஜ், வசந்த பாலன், அட்லி, எங்கேயும் எப்போதும் பட இயக்குநர் சரவணன் ஆகியோரை குறிப்பிட்டார். நடிகர்களில் தனக்கு தல அஜித்தை மிகவும் பிடிக்கும் என்றும், அவரை பற்றி நிறைய நல்ல விஷயங்கள் கேள்விப்பட்டதாகவும், அவர் மிகவும் கன்னியமானவர் என்றும் தெரிவித்திருக்கிறார். இதனால் தல அஜித் ரசிகர்கள் பெருமையோடு இருக்கிறார்கள்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close