ஸ்ரீரெட்டி TAMIL LEAKS: ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் என ஸ்ரீரெட்டியின் பட்டியல் நீளுகிறது. இவ்வளவுதானா? இன்னும் நீளுமா?
ஸ்ரீரெட்டி தெலுங்கு திரையுலகை போலவே தமிழ் திரையுலகிலும் தன்னை பாலியல் ரீதியாக பல பிரபலங்கள் பயன்படுத்திக்கொண்டதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இதன் தொடக்கமாக கடந்த இரண்டு நாட்களில் இயக்குநர் முருகதாஸ் மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த் பெயர்களை வெளியிட்டார்.
ஸ்ரீரெட்டி அடுத்த டார்கெட்டாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் பெயரை வெளியிட்டுள்ளார். இதனால் தமிழ் சினிமா உலகின் பல்ஸை நாளுக்கு நாள் எகிற வைத்துக் கொண்டிருக்கிறார் ஸ்ரீரெட்டி.

பட வாய்ப்புக்காக நடிகைகளைப் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தெலுங்கு சினிமாவில் இருப்பதாக நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது புகார் கூறிய நடிகை ஸ்ரீரெட்டி, அதற்காக அரை நிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் தனது முகநூல் பக்கத்தில் ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களின் பெயர்களையும், புகைப் படங்களையும் செல்போன் குறுந்தகவல்களையும் ஆதாரத்தோடு வெளியிட்டார்.
ஸ்ரீரெட்டி TAMIL LEAKS: புது வரவு ராகவா லாரன்ஸ்
இதையடுத்து தமிழ் சினிமாவிலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்தார். மேலும் தமிழ் திரையுலகில் பாலியல் ரீதியாக பயன்படுத்தி சினிமா வாய்ப்பு அளிக்காதவர்களின் பட்டியலை விரைவில் வெளியிடுவேன் என்று கூறினார். எடுத்த சபதத்தில் இருந்து எந்த மாற்றமும் இல்லாமல் நேற்று முந்தினம் முதல் #tamilleaks என்று அனைவரையும் கதி கலங்க வைக்கத் தொடங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது தமிழ் நடிகர் ராகவா லாரன்ஸ் பெயரை அவர் தன் ஃபேஸ்புக் பதிவில் வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவில் “எனக்கு ராகவா லாரன்ஸை சில நண்பர்கள் மூலமாக தெரியும். நாங்கள் இருவரும் கோல்கோண்டா ஓட்டலில் சந்தித்தோம். என்னை அவரது ரூமுக்கு அழைத்துச் சென்றார். நான் உள்ளே நுழைந்த உடனே, சுவாமி ராகவேந்திரா படம் மற்றும் ருத்ராக்ஷங்களை பார்த்தேன். அதையெல்லாம் பார்த்து இவர் நல்லவர் என்று நம்பினேன். ஆனால் அவரின் சுயரூபம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத் தொடங்கியது. இருவரும் பேசத் தொடங்கியபோது அவர் எப்படி சினிமாவிற்குள் வந்தார், ஏழ்மையில் இருந்து எப்படி வாழ்க்கையில் முன்னேறினார் என்றெல்லாம் பேசினார். நானும் அவரின் வாழ்க்கை கதையை கேட்டு பிரமித்துப் போனேன். ஆனால் சில நிமிடத்திலேயே என்னை கண்ணாடி முன் நின்று கவர்ச்சியாக நடனம் ஆடவும், கவர்ச்சியான பாவங்களை செய்யவும் சொன்னார். இதைப் பார்த்தவுடன் எனக்கு சினிமா வாய்ப்பு தருவதாக கூறினார். எங்கள் நட்பு நன்றாக தொடர்ந்தது. ஆனால் சில நாட்களிலேயே இனிமையான நபர் வில்லனாக மாறிவிட்டார்.” என்று ஸ்ரீரெட்டி தனது முகநூலில் லாரன்ஸ் பற்றி கூறியுள்ளார்.
இதுவரை தமிழ்த் திரையுலகில், இயக்குநர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் பெயர்கள் வெளியாகியுள்ளது. இரண்டு நாட்களிலேயே தமிழ் சினிமா இண்டஸ்டிரியில் இவ்வளவு பரபரப்பு ஏற்பட்டிருந்தாலும், சம்மந்தப்பட்ட மூன்று பேரும் இப்போது வரை எந்த மறுப்பு கருத்தும் தெரிவிக்கவில்லை.