தொல்லை தாங்க முடியவில்லை; தமன்னா மீது பாயும் ஸ்ரீரெட்டி

தமிழ், தெலுங்கு சினிமா நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார்களைக் கூறி பரபரப்பைக் கிளப்பிய நடிகை ஸ்ரீரெட்டி இப்போது தனது கோபத்தை நடிகை தமன்னா மீது திருப்பி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

sri reddy target on Tamannaah, actress sri reddy, ஸ்ரீரெட்டி, ஸ்ரீரெட்டி புகார், sri reddy sexual complaint on actors and directors, தமன்னா, Tamannaah web series
sri reddy target on Tamannaah, actress sri reddy, ஸ்ரீரெட்டி, ஸ்ரீரெட்டி புகார், sri reddy sexual complaint on actors and directors, தமன்னா, Tamannaah web series

நடிகர்கள் இயக்குனர்கள் மீது பாலியல் புகார்களைக் கூறி பரபரப்பைக் கிளப்பிய நடிகை ஸ்ரீரெட்டி இப்போது தனது கோபத்தை நடிகை தமன்னா மீது திருப்பியுள்ளார்.

மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் கல்லூரி பேராசிரியரா?

நடிகை ஸ்ரீரெட்டி தனக்கு படவாய்ப்புகள் தருவதாகக் கூறி தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டனர் என்று சில தமிழ், தெலுங்கு சினிமா நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார்களைக் கூறி தென்னிந்திய சினிமா உலகையே கதிகலங்க வைத்தார். இது தொடர்பாக ஐதராபத்தில் ஸ்ரீரெட்டி அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி மேலும் அதிரடித்தார். மேலும், சில நடிகர்களைப் பற்றி தனது முகநூலில் புகார்களை தெரிவித்து வந்தார்.

இதனைத் தொடர்ந்து, ஸ்ரீரெட்டி கூறிய புகாரால் தனக்கு ஆந்திராவில் பாதுகாப்பு இல்லை என்று கூறி அவர் சென்னையில் குடியேறினார். தற்போது ஸ்ரீரெட்டிக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்து நடித்து வருகிறார். அது மட்டுமில்லாமல், ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை ‘ரெட்டி டைரி’ என்ற பெயரில் படமாகி வருகிறது. இருப்பினும் அவ்வப்போது சர்ச்சை கருத்துகளை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் ஸ்ரீரெட்டி கடந்த வாரம் நடிகர் விஷால் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்து மீண்டும் பரபரப்பைக் கிளப்பினார்.

இதனைத் தொடர்ந்து ஸ்ரீரெட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், தமன்னா மீது தனது கோபத்தை திருப்பியுள்ளார். ஸ்ரீரெட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடுகையில், “சென்னையில் உள்ள எனது வீட்டின் அருகே தமன்னா நடிக்கும் வெப் தொடரின் படப்பிடிப்பு நடக்கிறது. அவர்களின் தொல்லை தாங்க முடியவில்லை. நான் கடந்த 10 நாட்களாக இந்த தொல்லையை அனுபவித்து வருகிறேன். இனி என்னால், பொறுக்க முடியாது. அவர்களிடம் நேரில் சென்று பேசி இந்த பிரச்னைக்கு முடிவுகட்டப் போகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sri reddy target on tamannaah

Next Story
இந்தியன் 2 படத்தின் புது போஸ்ட்டர்… கொண்டாடும் ரசிகர்கள்!Kamal Haasan starrer Indian 2 new poster
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com