ஸ்ரீதேவியின் மரணம்: அனைவரும் எழுப்பும் கேள்விகள்!

ஸ்ரீதேவிக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்ததாக கூறப்பட்டது. ஆனால், நேரம் சரியான நேரம் குறித்த எந்த தகவலும் இல்லை

மாரடைப்பால் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் இறப்பு குறித்து பலரும் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு தற்போது வரை பதில் கிடைக்கவில்லை.

5 மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் நேற்றுமுன் தினம் (24.2.18) இறந்து விட்டதாக செய்தியகள் வெளியாகின. துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு குடும்பத்துடன் சென்றிருந்த ஸ்ரீதேவி, ஹோட்டலின் குளியலறையில் மாரடைப்பால் இறந்து கிடந்ததாக துபாய் ஊடகங்கள் செய்தி வெளியிட்டனர்.

நடிகை ஸ்ரீதேவியின் உடல் இந்தியாவில் கொண்டு வந்த பின்பு, மும்பையில் இறுதிச் சடங்கு செய்யவுள்ளதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்ரீதேவியின் இறுதி அஞ்சலியில் கலந்துக் கொள்ள பல்வேறு பிரபலங்கள் மும்பை விரைந்துள்ளனர். இந்நிலையில், அவரின் இறப்பு குறித்து அனைத்து தரப்பினரும் எழுப்பியுள்ள சில கேள்விகளுக்கு தற்போது வரை முறையான பதில் கிடைக்கவில்லை.இதோ அந்த கேள்விகள்…

ஸ்ரீதேவி மரணம் அடைந்த நேரம்?

நடிகை ஸ்ரீதேவி, அவரது உறவினர் மோஹித் மார்வாவின் திருமண நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்காக தனது குடும்பத்தினருடன் துபாய் சென்றிருந்தார். சனிக்கிழமை இரவு ஸ்ரீதேவிக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்ததாக கூறப்பட்டது. ஆனால், நேரம் சரியான நேரம் குறித்த எந்த தகவலும் இல்லை.

ஸ்ரீதேவி இறப்பை உறுதிப்படுத்தியது யார்?

சனிக்கிழமை இரவு நடிகை ஸ்ரீதேவி இறந்துவிட்டதாக ஊடகங்களில் தகவல் பரவியது. அப்போது ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு ஸ்ரீதேவியின் மைத்துனர் சஞ்சய் கபூர் பதில் அளித்துள்ளார். ஸ்ரீதேவியின் மரணம் உண்மை என்றும் தெரிவித்தார். ஆனால், துபாயில் அவர் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தி கூறியவர் யார்? என்ற கேள்விக்கு சஞ்சய் பதில் அளிக்கவில்லை.

அன்று இரவு ஸ்ரீதேவிக்கு நடந்தது என்ன?

திருமண நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்காக துபாய் சென்றிருந்த ஸ்ரீதேவி அங்குள்ள ஜூமைரா எமிட்ராஸ் டவர் ஹோட்டலில் தங்கியிருந்தார். அப்போது, குளியல் அறைக்கு சென்ற ஸ்ரீதேவி 15 நிமிடங்கள் ஆகியும் வெளியே வராததால் அவரின் கணவர் போனி கபூர் கதவை உடைத்து பார்த்த போது ஸ்ரீதேவி மயங்கிய நிலையில் இருந்துள்ளார். எனவே, அவர் குளியலைறைக்கு சென்ற 15 நிமிடங்களில் அவருக்கு என்னவானது? என்பது புதிராகவே இருக்கிறது.

இதற்கு முன்பு அவருக்கு இதயம் சம்மந்தமான பிரச்சனைகள் வந்துள்ளதா?

54 வயதாகும் ஸ்ரீதேவி உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறைக் கொண்டவர். சினிமாசை விட்டு விலகி, இல்லத்தரசியாக இருந்த போது, தனது உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில்,மாரடைப்பால் அவர் உயிரிழந்துள்ளார் என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சியடை வைத்துள்ளது. எனவேம் ஸ்ரீதேவியின் மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது.

ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம்:

நடிகை ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் இன்று வரை உறுதிச் செய்யப்படாத தகவலாகவே இருந்து வருகிறது. துபாயில் உள்ள ஸ்ரீதேவியின் உடல், முறையான ஆவணங்கள் சமர்பிக்கப்பட்ட பின்னரே, இந்தியா வந்து சேரும். துபாயில் அதற்கான செயல்முறை தற்போது வரை முடியாததால் அவரின் உடல் இந்தியா கொண்டு வருவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close