Advertisment

மினி ஸ்கர்ட்... அதே மின்னலடிக்கும் அழகு... ஸ்ரீதேவி விஜயகுமார் வைரல் போட்டோஸ்!

நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் மினி ஸ்கர்ட்டில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
sridevi vijaykumar

ஸ்ரீதேவி விஜயகுமார்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியரின் மூன்றாவது மகளும் நடிகையுமான ஸ்ரீதேவி விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மினி ஸ்கர்ட்டில் அதே மின்னலடிக்கும் அழகில் வெள்ளை நிற டாப்பில் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் மினி ஸ்கர்ட்டில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

Sridevi vijaykumar

நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார், சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக  அறிமுகமானவர். சத்யராஜ் நடித்த ரிக்ஷா மாமா திரைப்படத்தில் அறிமுகமானார். வளர்ந்த பிறகு, இயக்குனர் கதிர் இயக்கத்தில், அஜித்தின் மச்சினன் ரிச்சர்ட் ஹீரோவாக நடித்த, காதல் வைரஸ் படத்தில் ஹிரோயினாக அறிமுகமானார். இந்த படம் சரியாக ஓடவில்லை. இதைத் தொடர்ந்து, ஜீவாவுக்கு ஜோடியாக தித்திக்குதே, மாதவனுடன் பிரியமான தோழி, தனுஷ் ஜோடியாக தேவதையை கண்டேன் போன்ற படங்களில் நடித்தார். ஸ்ரீதேவி நடித்த இந்த மூன்று படங்களும் சூப்பர் ஹிட் அடித்தன. தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, தெலுங்கு, கன்னட மொழி சினிமாக்களிலும் நடித்துள்ளார்.

Sridevi vijaykumar

பிஸியாக நடித்து வந்த நடிகை ஸ்ரீதேவி, கடந்த 2009-ம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர், தமிழில் எந்த படங்களிலும் நடிக்கவில்லை. ஆனால், 2 தெலுங்கு படங்களிலும் 1 கன்னட படத்திலும் நடித்தார். 

நடிகை ஸ்ரீதேவி - ராகுல் தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கும், ஸ்ரீதேவி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார்.

Sridevi vijaykumar  2

நடிகை ஸ்ரீதேவி இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். ஸ்ரீதேவி அவ்வப்போது அழகான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். அந்த வகையில், நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார், போலந்து வெகேஷன் டூர் சென்றுள்ளார். அங்கே ஸ்ரீதேவி விஜயகுமார், மினி ஸ்கர்ட், வெள்ளை நிற டாப், அதே மின்னலடிக்கும் அழகுடன் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். 

ஸ்ரீதேவி, பெரும்பாலும் படத்தில், புடவை அணிந்தே நடித்திருந்தார். ஆனால், தற்போது மினி ஸ்கர்ட் அணிந்து ஹாட்டாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படதைப் பார்த்த ரசிகர்கள், லைக்குகள், கம்மெண்ட்களை பொழிந்து வருகின்றனர். 

Sridevi vijaykumar

இந்த படத்தைப் பார்த்த ரசிகர் ஒருவர், “மேடம் நீங்கள் மீண்டும் இண்டஸ்ட்ரிக்குள் வரவும்” என்று வரவேற்றுள்ளார். மற்றொரு ரசிகர், “பிரபாஸ் அண்ணா ஃபர்ஸ் ஹீரோயின்” என்று கம்மெண்ட் செய்துள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

sridevi vijaykumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment