Advertisment

ஸ்ரீதேவியை பார்க்க விரும்பிய நீதிபதி: கோர்ட்டை சூழ்ந்த ரசிகர்கள் கூட்டம்: மனம் திறந்த பிரபல வழக்கறிஞர்!

மூத்த வழக்கறிஞர் மஜீத் மேமன் ஸ்கிரீன் உடனான உரையாடலின்போது நடிகை ஸ்ரீதேவி பற்றிய நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.

author-image
WebDesk
New Update
Sridevi News

பல்வேறு உயர்மட்ட வழக்குகளில் பல பாலிவுட் பிரபலங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ள மூத்த வழக்கறிஞர் மஜீத் மேமன் தனது 50 ஆண்டுகால பயணத்தை சுருக்கமாகக் கூறும் வகையில், தனது சுயசரிதையான மை மெமோயர்ஸ் என்ற புத்தகத்தை சமீபத்தில் வெளியிட்டார், அதில் அவர் பாலிவுட் பிரபலங்கள் தொடர்பான பல வழக்குகளைப் பற்றி குறிப்பிட்டுள்ள அவர், அனுபம் கெர் மற்றும் சுனில் தத் தொடர்ந்த அவதூறு வழக்குகள், குல்ஷன் குமாரின் கொலை வழக்கு மற்றும் பலவற்றைப் பற்றிப் பேசுகிறார்.

Advertisment

Read In English: ‘Sridevi was called to court only because magistrate wanted to see her,’ recalls Majeed Memon: ‘The crowd was uncontrollable’

அதேபோல், 1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சஞ்சய் தத் விசாரணையையும் பிரதிநிதித்துவப்படுத்திய மஜீத், புத்தகத்தில் அதை தனது மிகவும் சவாலான காலங்களில் ஒன்றாகக் குறிப்பிட்டள்ளார். மேலும், பாலிவுட் மற்றும் பாதாள உலக தொடர்பையும் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள அவர், ஒரு குறிப்பிட்ட வழக்கை கவர்ச்சிகரமாக்க மட்டுமே எத்தனை முறை நட்சத்திரங்களின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டன என்பதை பற்றியும் வெளிப்படுத்துகிறார்.

இதனிடையே சமீபத்தில், ஸ்கிரீன்0 (SCREEN) உடனான ஒரு பிரத்யேக உரையாடலில், மஜீத் மேமன், பல பிரபலங்கள் தொடர்பான வழக்குகள் தனது புத்தகத்தில் இடம்பெற்றிருந்தாலும், அந்த புத்தகத்தில் எழுதப்படாத ஒரு வழக்கு மறைந்த நடிகை ஸ்ரீதேவியைப் பற்றியது என்று பகிர்ந்து கொண்டார். இந்த வழக்கு தொடர்பான விவரங்களை அவர் பகிர்ந்து கொள்ளவில்லை என்றாலும், நீதிபதி ஸ்ரீதேவியை நேரில் பார்க்க விரும்பியதால் அவர் நீதிமன்றத்திற்கு விசேஷமாக அழைக்கப்பட்டதாகக் கூறினார்.

Advertisment
Advertisement

இது குறித்து பேசிய அவர், ஒருமுறை, நான் ஒரு வழக்கில் ஸ்ரீதேவிக்காக ஆஜரான நேரத்தில், அவர் சினிமாவின் உச்சத்தில் இருந்தார். மக்கள் அவரைப் பார்க்க வெறித்தனமாக இருந்தனர், நீதிபதி கூட அவரைப் பார்க்க மிகவும் ஆர்வமாக இருந்தார். நான் இந்த வழக்கில் அவர் நேரில் ஆஜராக விலக்கு கோரி விண்ணப்பித்தேன், ஆனால் அது வழங்கப்படவில்லை. ஸ்ரீதேவியைப் பார்க்க ஆர்வமாக இருந்ததால், அவரை ஆஜராக வைக்குமாறு நீதிபதி என்னிடம் கூறினார். இறுதியாக, அவர் நீதிமன்றத்திற்கு வந்தபோது, கூட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகமாக இருந்தது," என்று மஜீத் மேமன் கூறியுள்ளார்.

பாரத் ஷா வழக்கின் போது ஷாருக்கானும் சல்மான் கானும் விரோத சாட்சிகளாக மாறியதாக அவர் தனது புத்தகத்தின் மற்றொரு அத்தியாயத்தில் குறிப்பிட்டார். தனது புத்தகத்தில் பாலிவுட்டின் முக்கிய பெயர்களை பெயரிட்டதற்கு ஏதேனும் எதிர்ப்பு இருக்கும் என்று அஞ்சுகிறாரா என்று கேட்டபோது, "சல்மான் கான் அல்லது ஷாருக்கானின் பெயர்களை நான் கூறுவதற்கு சிறிதும் பயப்படவில்லை, வழக்கை கவர்ச்சிகரமாக்குவதற்காக மட்டுமே அவர்கள் மீது பொய்யாக குற்றம் சாட்டப்பட்டதாக நான் கூறியுள்ளேன்" என்று கூறினார்.

பாலிவுட்டுடனான தனது தொடர்பைப் பற்றிப் பேசுகையில், பாலிவுட் நட்சத்திரங்கள் பலருடன் கல்லூரியில் படித்ததாக அவர் தெரிவித்தார். "நான் பாலிவுட்டில் மிகவும் பிரபலமானவன். மகேஷ் பட் ஒரு தனிப்பட்ட நண்பர், மேலும் எனது கல்லூரி நாட்களில் இருந்தே பல்வேறு பிரபலங்களுடன் நான் நண்பர்களாக இருந்தேன். திலீப் குமார், சுனில் தத் மற்றும் நான் உட்பட பலர் தினமும் நௌஷாத் சாப் வீட்டில் கூடுவோம். நான் அவர்களுடன் பழகி ஒரு வழக்கறிஞரானேன் என்று கூறியுள்ளார்.

Sridevi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment