Advertisment
Presenting Partner
Desktop GIF

‘மிதுன் சக்ரவர்த்தியை பிரிந்த பிறகு ஸ்ரீதேவி கலக்கமடைந்தார்’: பழம்பெரும் நடிகை சுஜாதா மேத்தாவின் நினைவலைகள்

பழம்பெரும் நடிகை சுஜாதா மேத்தா, தான் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் கடந்த கால அனுபவங்கள் குறித்து நினைவு கூர்ந்துள்ளார். குறிப்பாக, ஸ்ரீதேவி, ரஜினிகாந்த் போன்றோருடன் பணியாற்றிய அனுபவம் குறித்து அவர் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Sridevi

பழம்பெரும் நடிகை சுஜாதா மேத்தா, 1970 மற்றும் 80-களில் தன்னுடன் பணியாற்றிய நடிகர்களுடனான அனுபவம் குறித்து அண்மையில் மனம் திறந்து பல கருத்துகளை தெரிவித்துள்ளார். பிரதிகாத், யதீம் மற்றும் கன்வர்லால் போன்ற படங்களில் நடித்தவர் சுஜாதா. ஸ்ரீதேவியுடனான தனது அனுபவம் மற்றும் பல தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார்.

Advertisment

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: ‘Sridevi was distraught after break up with Mithun Chakraborty; Rajinikanth would talk to his own reflection,’ recalls Sujata Mehta

 

Advertisment
Advertisement

ஹிந்தி ரஷ் என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் அவர் பல்வேறு விஷயங்களை தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஸ்ரீதேவி குறித்து வெளியே பலதரப்பட்ட கருத்துகள் பரவிய நிலையில், அவருடன் பணியாற்றிய போது தான் அவ்வாறு உணரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீதேவி அதிகமாக பேசாதவர் என்றும், தன் மீது அவர் மிகுந்த மரியாதை கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீதேவி மற்றும் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோர் இடையே ஏற்பட்ட பிரிவு குறித்து சுஜாதா தெரிவித்துள்ளார். அந்த பிரிவுக்கு பின்னர் ஸ்ரீதேவி கலக்கமுற்று இருந்ததாக சுஜாதா குறிப்பிட்டுள்ளார். எனினும், கேமரா முன்னால் வந்து தோன்றும் போது அவை அனைத்தையும் மறந்து ஸ்ரீதேவி தன் பணியின் மீது மட்டுமே கவனம் செலுத்தினார் என்றும் சுஜாதா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீதேவிக்கும், மாதுரி தீட்சித்துக்கும் இடையே சற்று மோதல் போக்கு இருந்ததாக பரவிய தகவல் குறித்து சுஜாதாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. “அவர்கள் படப்பிடிப்பில் தூரத்தில் அமர்ந்திருப்பார்கள். மாதுரி யாரிடமும் பேச மாட்டார். வாக்மேன் அணிந்து ஓரத்தில் அவர் அமர்ந்திருப்பார்“ என சுஜாதா குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், 1987-ஆம் ஆண்டு ஸமீன் திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் நடித்த அனுபவம் குறித்தும் சுஜாதா தெரிவித்துள்ளார். நட்சத்திர அந்தஸ்த்தில் இருந்தும், ரஜினிகாந்த் மிகவும் பணிவாக நடந்து கொள்வார் என அவர் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் எப்படி இவ்வாறு திரைப்படங்களில் நடிக்கிறார் என தான் கேள்வி கேட்டதாக சுஜாதா கூறினார். அதற்கு, "இரவு பகலாக கண்ணாடி முன்பு அமர்ந்து பேசிக் கொள்வேன். உணவுகளை தவிர்த்து மோர் மட்டுமே எடுத்துக் கொள்வேன்" என ரஜினி பதிலளித்ததாக சுஜாதா தெரிவித்துள்ளார்.

மேலும், மறைந்த நடிகர் ரிஷி கபூர் மற்றும் அவரது மகன் ரன்பீர் கபூர் குறித்தும் அவர் பகிர்ந்து கொண்டார். ரன்பீர் கபூர் சிறந்த நடிகர் என்றும் சுஜாதா தெரிவித்துள்ளார். இதனிடையே, ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடித்த திரைப்படங்களை தான் பார்த்தது இல்லை எனக் கூறிய அவர், ஜான்வி நடித்த விளம்பரங்களை மட்டுமே பார்த்ததாக தெரிவித்துள்ளார்.

இளம் தலைமுறை நடிகைகளில் அலியா பட் தனக்கு மிகவும் பிடித்தமானவர் என்றும், அவருடன் இணைந்து பணியாற்ற தான் விரும்புவதாகவும் சுஜாதா குறிப்பிட்டுள்ளார்.

 

 

Sridevi Bollywood
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment