ஸ்ரீதேவியின் பிறந்த நாளில் அவரது மகள் வெளியிட்ட புகைப்படம். கண்ணீரில் பாலிவுட்!

Bollywood Chandni's Birthday Anniversary: 54 வயதில் இந்த உலகை விட்டுப் பிரிந்த ஸ்ரீதேவியின் திரையுலக பங்களிப்பு, என்றும் காலத்தால் அழியாதவை.

Sridevi’s Birth Anniversary: மறைந்த நடிகை ஸ்ரீதேவி பிறந்த நாள் இன்று. இதை நினைவுக்கூறும் விதமாக அவரது செல்லமகள் ஜான்வி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீதேவி பிறந்த நாள் : Chandni of Bollywood Sridevi’s Birth Anniversary

தென்னிந்திய சினிமாவில் முதல் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டவர் நடிகை ஸ்ரீதேவி.  எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி கமல், அஜித் விஜய் என  மூன்று தலைமுறைகளுடனும் நடித்தவர். 16 வயதினிலே திரைப்படம் ஸ்ரீதேவியின் சினிமா பயணத்தில் ஒரு மைல்கல்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி அனைத்து  மொழி படங்களிலும் நம்பர்1 கதாநாயகியாக வலம் வந்தார்.  அவரது நடிப்பைக் கண்ட திரையுலகம் விருதுகளாலும், பாராட்டுக்களாலும் அவரை கவுரவிக்க தொடங்கியது.

நடிகர் கமல்ஹாசனுடன் 21 படங்கள், நடிகர் ரஜினியுடன் 15 படங்கள், அமிதாப் பச்சன், சீரஞ்சீவி, மோகன் லால் என  இவர் ஜோடி சேராத நடிகர்களே இல்லை.   4 வயதில் சினிமாவில் காலெடி எடுத்து வைத்த இவர் தனது 54  ஆவது வயதில்   உலகை விட்டு பிரிந்தார். ஸ்ரீதேவியின் திரையுலக பங்களிப்பு  காலத்தால் என்றுமே  அழியாதவை.

ஸ்ரீதேவியின் இறப்பு திரையுலகத்திற்கும் மட்டுமில்லை அவரின் குடும்பதாருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரின் செல்ல மகள்களான ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகிய இரண்டு பெண்களும்  அம்மாவை இழந்தது மிகப் பெரிய துயரம் என்று பல மேடைகளில் கூறி வருகின்றனர்.

சமீபத்தில் ஸ்ரீதேவியின் மூத்தமகள் ஜான்வியின் அறிமுகப்படமான ‘த்டாக்’ திரைப்படம் பாலிவுட்டில் வெளியாகியது. படத்தில் ஜான்வியின் நடிப்பு  ஸ்ரீதேவியின் நடிப்புடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்ட பல்வேறு விமர்சனங்கள் எழுந்தனர்.  இதற்கு  ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தகுந்த பதிலையும் அளித்திருந்தார்.

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor) on

இந்நிலையில்,   ஸ்ரீதேவியின் பிறந்த நாளான இன்று  அவரது மூத்த மகள் ஜான்வி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  ஸ்ரீதேவியுடன் எடுத்துக்  கொண்ட பழைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் குழந்தையாக ஸ்ரீதேவியின் கையில் ஜான்வி உள்ளார்.

இந்த புகைப்படத்துடன் சோகமான வரிகளையும் ஜான்வி பதிவிட்டுள்ளார்.  இதைப்பார்த்த பாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு ஆழ்ந்த  இரங்களை  கூறி தேற்றி வருகின்றனர்.

1980-ல் “வறுமையின் நிறம் சிகப்பு” திரைப்படம், வெளியான பெரும்பாலான தியேட்டர்களில் வெள்ளிவிழா கண்டது. இந்த படத்தில் கமலுக்கு நிகராக, யதார்த்தமான நடிப்பை வெளிபடுத்தியிருந்தார் ஸ்ரீதேவி.

திரையுலகில் 4 வயதில் குழந்தை நட்சத்திரமாக நுழைந்து, 54 வயதில் இந்த உலகை விட்டுப் பிரிந்த ஸ்ரீதேவியின் திரையுலக பங்களிப்பு, என்றும் காலத்தால் அழியாதவை. ரசிகர்களின் இதயங்களை விட்டு அகலாதவை. அவரது பிறந்த நாளன்று அவரை நினைவு கூறுகிறது நியூஸ் 7 தமிழ்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close