/tamil-ie/media/media_files/uploads/2018/03/fur-sridevi-L-Insta.jpg)
இறந்த பாலிவுட் நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள், தன் தாய் நினைவாக உருக்கமான பதிவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
இந்திய சினிமாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்ற நடிகை ஸ்ரீதேவி, கடந்த ஞாயிற்றுக்கிழமை துபாயில் காலமானார். அவரது இறப்பு குறித்து பல்வேறு சர்ச்சைகளும் இடையே எழுந்தது. இந்நிலையில், பல்வேறு நடைமுறை சிக்கல்களை கடந்து அவரது உடல் கடந்த செவ்வாய் கிழமை இரவு மும்பை வந்தடைந்து. இதையடுத்து, வியாழக்கிழமை அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜானவியின் 21வது பிறந்த நாள் வரும் 7-ஆம் தேதி வரவிருக்கிறது. பிறந்த நாளன்று ஜானவி தன் தாயின் நினைவாக உருக்கமான பதிவொன்றை தன் இன்ஸ்டகிராம் அக்கவுண்டில் பகிர்ந்துள்ளார்.
அதில், ”என் மனதில் இப்போது வெற்றிடம் உருவாகியுள்ளது, அதனுடன் வாழ நான் பழகிக்கொள்ள வேண்டும். இத்தனை வெறுமைக்கிடையேயும் உங்கள் அன்பை உணர்கிறேன். வலியிலிருந்தும், வருத்தத்திலிருந்தும் நீங்கள் என்னை காக்கின்றீர்கள். நான் எப்போதெல்லாம் கண்களை மூடுகின்றேனோ, அப்போதெல்லாம் நான் நினைத்துப் பார்க்க நல்லவையே உள்ளன.”, என குறிப்பிட்டுள்ளார்.
”என் அம்மாவின் வாழ்க்கையில் மிகப்பெரிய பங்கு என்னவென்றால், என் தந்தையிடம் அவர் பகிர்ந்துகொண்ட காதல்தான். அந்த அன்பு இறவாதது, உலகத்தில் எதற்கும் ஈடு இணை இல்லாதது. அதனால், அந்த அன்பை மதியுங்கள். அதற்கு களங்கம் உண்டாக்க யாரேனும் நினைத்தால், பெரிதும் வலிக்கும்”, எனவும் பதிவிட்டுள்ளார்.
ஜானவி கபூரின் முதல் படம் ததாக், விரைவில் வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.
A post shared by Janhvi Kapoor (@janhvikapoor) on
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.