வானொலிக்கு ரஜினிகாந்த் வழங்கிய ஒரே பேட்டி இதுதான்: பேந்த பேந்த விழித்த அப்துல் ஹமீது; பேட்டியில் நடந்தது என்ன?

ரஜினிகாந்த் வானொலிக்கு அளித்த பேட்டியின்போது நடந்த சுவாரசியமான விஷயங்களை தொகுப்பாளர்(ஆர்.ஜே) அப்துல் ஹமீது கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் வானொலிக்கு அளித்த பேட்டியின்போது நடந்த சுவாரசியமான விஷயங்களை தொகுப்பாளர்(ஆர்.ஜே) அப்துல் ஹமீது கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
rajinikanth

இலங்கை வானொலியில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தனது தனித்துவமான குரலாலும், உச்சரிப்பாலும், பண்பட்ட மொழி நடையாலும் தமிழ் வானொலி நேயர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் பி.ஹெச். அப்துல் ஹமீத். 'அறிவிப்பாளர் சக்கரவர்த்தி' என்று நேயர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட இவர், ரஜினிகாந்த் உடன் நடந்த ஒரு சுவாரசியமான நேர்காணல் அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவை ஃபேஸ்புக்கில் கே. வடிவேலு சாமி என்பவர் பகிர்ந்து மீண்டும் நினைவுபடுத்தியுள்ளார். 

Advertisment

அப்துல் ஹமீத் குரல் கம்பீரமானது, தெளிவான உச்சரிப்புடன் கூடியது. எந்த ஒரு வார்த்தையையும் பிழையின்றி, சரியான தொனியுடன்  தமிழில் உச்சரிப்பதில் அவர் தனித்துவம் மிக்கவர். இதுவே அவரைப் பல நேயர்களின் ஆதர்ச அறிவிப்பாளராக மாற்றியது. தூய தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்தி, எளிமையும் இனிமையும் கலந்த ஒரு தனித்துவமான மொழி நடையைப் பின்பற்றி பேசுவார். 

இலங்கை வானொலியில் பல பிரபலமான நிகழ்ச்சிகளை அவர் தொகுத்து வழங்கியுள்ளார். குறிப்பாக, 'பொங்கும் பூம்புனல்', 'பாட்டுக்கு பாட்டு', 'திரைப்படச் சுவையூற்று' போன்ற நிகழ்ச்சிகள் அவரது குரலாலும், திறமையாலும் மிகவும் பிரபலம் அடைந்தன. இந்த நிகழ்ச்சிகள் மூலம், அவர் பாடல்கள், கவிதை, இலக்கியம், திரைப்படம் எனப் பல துறைகள் பற்றிய தனது ஆழமான அறிவை வெளிப்படுத்தினார். திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள் எனப் பல பிரபலங்களை அவர் நேர்காணல் செய்துள்ளார். அவரது நேர்காணல்கள் ஆழமானதாகவும், சுவாரஸ்யமானதாகவும் இருக்கும். குறிப்பாக, ரஜினிகாந்த்தை அவர் வானொலிக்காகப் பேட்டி கண்டது குறித்த தகவல்கள் இன்றும் பேசப்படுகின்றன.

இந்த பேட்டி ரஜினிகாந்த் வானொலிக்கு கொடுத்த முதல் பேட்டி என்றும், இதுவே அவர் வானொலியில் தோன்றிய ஒரே பேட்டி என்றும் பலரால் கூறப்படுகிறது. பி.ஹெச். அப்துல் ஹமீத் அவர்கள் ரஜினிகாந்தை பேட்டி எடுத்தபோது நடந்ததாக சில சுவாரஸ்யமான தகவல்கள் பகிர்ந்துள்ளார். அப்துல் ஹமீத், ரஜினிகாந்த் படப்பிடிப்பில் இருந்தபோது அவரை பேட்டி எடுக்கச் சென்றதாகவும், ரஜினிகாந்த் அப்போது எந்தவிதமான பந்தாவும் இல்லாமல் மிகவும் எளிமையாக இருந்ததாகவும் கூறினார். 

Advertisment
Advertisements

பேட்டியின்போது ரஜினிகாந்த் சில கேள்விகளுக்கு சட்டென்று பதிலளிக்காமல் பொருமையாக நிறைய நேரம் எடுத்து தாமதமாக ஆம்/ இல்லை என்று மட்டும் பதில் சொன்னதாக பி.ஹெச். அப்துல் ஹமீத் தெரிவித்தார். இந்த பேட்டியின் மூலம் அப்துல் ஹமீத் எப்படி கேள்வி கேட்க வேண்டும், தான் கேள்வி கேட்டு பலரை மடக்கி இருக்கிறேன் ஆனால் ரஜினி சார் கேள்வி கேட்ட என்னை பேந்த பேந்த் விழிக்க வைத்துவிட்டார் என்று நகைச்சுவையோடு கூறினார். 

Rajini Kanth

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: