தனது திறமையான சுழற்பந்துவீச்சில் மூலம் கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகளை படைத்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு 800 என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன். தனது திறமையாக சுழற்பந்துவீச்சின் மூலம் எதிரணி வீரர்களை திணறடித்த இவர், பலமுறை தனது பந்துவீச்சு சர்ச்சை காரணமாக சோதனையில் சிக்கியுள்ளார். ஆனால் தான் சந்தித்த அத்தனை சோதனைகளுக்கும் வாய்மொழியாக இவல்லாமல் தனது பந்துவீச்சின் மூலம் பதிலடி கொடுத்தவர்.
வலைதளங்கள், செய்தித்தாள்கள் என தன்னைப்பற்றி எந்த விமர்சனங்கள் வந்தாலும் தனது திறமையை முன்வைத்து அந்த விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுத்த முரளிதரன் தற்போது டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டிகளில் 530 விக்கெட்டுகளும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். முரளிதரன், தற்போது ஐசிசி கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேமில் உறுப்பினராக உள்ளார்.
இந்நிலையில் முரளிதரனின் வாழ்க்கை பயணத்தை எடுத்துக்கூறும் விதமாக 800 என்ற பெயரில் திரைப்படம் தயராகியுள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், முரளிதரன் மற்றும் முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரும் கேப்டனுமான சனத் ஜெயசூர்யாவுடன் ஆகியோர் இணைந்து படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லரை மும்பையில் வெளியிட்டார்.
186 வினாடிகள் கொண்ட 800 படத்தின் டிரெய்லர் "முத்தையா முரளிதரனின் தெரியாத கதை" 1970 களில் இலங்கையில் சிறுபான்மை தமிழர்களை குறிவைத்து நடத்தப்பட்ட படுகொலைகள், அப்போது நடந்த நிகழ்வுகளின் காட்சிகளை வெளிக்காட்டுவதில் இருந்து தொடங்குகிறது, அந்த காலகட்டத்தில் மக்கள் எதிர்கொண்ட சவால்களை எடுத்தக்கூறும் இந்த டிரெய்லர், "புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குழுவைச் சேர்ந்த ஒருவருக்கு, குடிமகனாக அங்கீகாரம் பெறுவது மிகவும் கடினமானது," என்று ஒரு குரல் ஒலிக்கிறது. அதன்பிறகு வெள்ளை கிரிக்கெட் ஜெர்சி அணிந்த ஒரு இளைஞன் துப்பாக்கி முனையில் ஆயுதம் ஏந்திய இராணுவ வீரர்களின் முன் மண்டியிடும் காட்சி உள்ளது.
அதன்பிறகு அந்த இளைஞன் ஒரு மரியாதைக்குரிய நபராக மாறுவது, அவரது புகழ் உயர்வு, அர்ஜுன ரணதுங்கா போன்ற கிரிக்கெட் ஜாம்பவான்களுடன் அவர் கருத்தை பகிர்ந்து கொண்டது மற்றும் இலங்கை கிரிக்கெட் அணியின் பாரம்பரியத்திற்கு அவர் செய்த குறிப்பிடத்தக்க பங்களிப்பை விளக்குகிறது இந்த டிரெய்லர்.
அதேபோல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அவர் சந்தித்த "நோ-பால்" சர்ச்கைகள் இந்த சர்ச்கைளில் இருந்து எப்படி வெளியில் வந்தார் என்பது தொடர்பான காட்சிகளும் உள்ளது. எம்.எஸ்.ஸ்ரீபதி எழுதி இயக்கியுள்ள இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
டேனி பாயிலின் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் சலீமாக நடித்ததன் மூலம் பரவலான பாராட்டைப் பெற்ற மதுர் மிட்டல் இந்த படத்தின் முரளிதரன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர் மற்றும் விவேக் ரங்காச்சாரி இணைந்து தயாரிக்கும் இந்த 800 க்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் வெளியீடு தேதி இன்னும் அறிவிக்கப்பட்வில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.