பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒரு பெண் அறம் பட இயக்குனரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய பிரமுகருமான கோபி நயினார் தன்னிடம் ரூ 30 லட்சம் பணம் மோசடி செய்துள்ளதாக புகார் அளித்துள்ளார்.
Advertisment
நயன்தாரா நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான அறம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கோபி நயினார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இயக்குனர் கோபி நயினாரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து தற்போது மனுசி என்ற படத்தை இயக்கி வருகிறார். இயக்குனர் வெற்றிமாறன் தயாரிக்கும் இந்த படத்தில் நடிகை ஆன்டரியா முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இயக்குனர் கோபி நயினார் தன்னிடம் ரூ 30 லட்சம் பண மோசடி செய்துவிட்டதாக இலங்கையை சேர்ந்த சியாமளா என்ற பெண் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதில் தயாரிப்பாளர் விஜய் அமிர்தராஜ் மீதும் புகார் அளித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,
சினிமா நட்பு வட்டாரங்கள் மூலம் கடந்த 2018-ம் ஆண்டு ஆக்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பாளர் விஜய் அமிர்தராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர் அறம்பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் `கருப்பர் நகரம்' என்ற திரைப்படத்தை தயாரித்து தயாரித்து வந்தார். அந்த படத்தில் நடிகர் ஜெய் நாயகனாக நடித்து வந்தார். இந்த படத்திற்கு இணை தயாரிப்பாளராக செயல்படுமாறும் அமிர்தராஜ் என்னிட்டம் கூறினார்.
Advertisment
Advertisements
அதற்கு சம்மதம் தெரிவித்து பல்வேறு தவணையாக 30 லட்சம் ரூபாய் அவருக்கு கொடுத்தேன். 6 மாதத்தில் படத்தை முடித்துவிடலாம். படத்தின் லாபத்தில் 25 சதவீதம் தருவதாகவும் ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்பின்னர் இந்த படத்தின் பூஜை முடிந்து மூன்று நாட்கள் ஜெய்யை வைத்து கோபி நாயினார் படப்படிப்பு நடத்தினார். அந்த 3 நாட்களும் நானும் சூட்டிங்கில் கலந்து கொண்டேன். அதன் பிறகு பிரான்ஸ் சென்றுவிட்டேன்.
அப்போதிலிருந்து விஜய் அமிர்தராஜ் மற்றும் இயக்குநர் கோபி நாயினார் ஆகிய இருவரும் எனது தொடர்பை துண்டித்துவிட்டனர். நான் பலமுறை முயறசித்தும் அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை. இதனால் நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன். இயக்குநர் கோபி நயினார் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மாவட்ட செயலாளராக உள்ளதால் அதன் தலைவர் தொல் திருமாவளவன் தலையிட்டு எனது பணத்தை பெற்று தரவேண்டும். முதல்வர் ஸ்டான்லி தனக்கு உதவி புரிய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil