Rajinikanth’s Darbar: பொங்கலுக்கு வெளியான ‘பேட்ட’ திரைப்படம் ரஜினி ரசிகர்களுக்கு மாஸாக இருந்தது.
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருந்த இந்தப் படத்தில் சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள்.
இதைத் தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்தப் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. ‘தர்பார்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் நிவேதா தாமஸ், யோகி பாபு, ஜான் மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இந்நிலையில், தற்போது இந்தப் படத்தில் நடிகர் ஸ்ரீமனும் இணைந்திருக்கிறார். காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்களின் பாராட்டைப் பெற்ற ஸ்ரீமன் இந்தத் தகவலை ட்விட்டரில் அறிவித்திருக்கிறார்.
After 19 years got a role again in Dir MURUGADASS SIR FILM, and for the first time in my film career got opportunity to work with the LEGEND our one & only “THALAIVAR” SUPERSTAR, happy got registered in DOP Santhosh Jee’s lens, thx to LYCA & SPECIAL THX TO Dir MURUGADASS SIR pic.twitter.com/fZpOKmOBvi
— actor sriman (@ActorSriman) 6 June 2019
“தீனா ரிலீஸாகி 19 வருடம் கழித்து மீண்டும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளேன். முதன் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினி சாருடன் நடிப்பதால் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்” என குறிப்பிட்டு முருகதாஸ் மற்றும் ரஜினியுடன் எடுத்துக் கொண்ட படங்களையும் பகிர்ந்துள்ளார்.