உலகின் மிக உயரமான கட்டிடத்தில் வாழ்த்து - வாழ்ந்தா ஷாரூக்கா வாழனும்!

அடுத்த வருடம் மிகப் பெரிய சிறப்பான பார்ட்டிக்கு தயாராகுங்கள் என்று ரசிகர்களுக்கு அறிவிப்பு!

அடுத்த வருடம் மிகப் பெரிய சிறப்பான பார்ட்டிக்கு தயாராகுங்கள் என்று ரசிகர்களுக்கு அறிவிப்பு!

author-image
WebDesk
New Update
SRK features on Burj Khalifa on 55th birthday

SRK features on Burj Khalifa on 55th birthday :  பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் நேற்று தன்னுடைய 55வது பிறந்த தினத்தை கொண்டாடினார். உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் ஷாரூக் கானின் புகைப்படம் பகிரப்பட்டு அவருக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.  2016-ஆம் ஆண்டு துபாயின் அம்பாசிட்ராக இருக்கும் ஷாருக் கான் தன்னுடையசமூக வலைதள பக்கத்தில், “Happy Birthday Shah Rukh Khan” என்று ஒளிரும் வாழ்த்து செய்திக்கு முன்பு நின்ற வண்ணம் போஸ் கொடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

Advertisment

திரைப்பட இயக்குநர் கரண் ஜோஹர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷாரூக் கானுக்கு வாழ்த்துகளை பதிவு செய்துள்ளார். தன்னுடைய பிறந்த நாளுக்கு வாழ்த்துகளை தெரிவித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றிகளை கூறிய ஷாரூக் கான் இந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று காரணமாக உங்களுடன் சிறப்பாக இந்நாளை கொண்டாட இயலவில்லை. ஆனால் அடுத்த வருடம் மிகப் பெரிய சிறப்பான பார்ட்டிக்கு தயாராகுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Shah Rukh Khan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: