Tamil Serial News: பெரும்பாலான சீரியல் நடிகைகள் தற்போது சமூக வலைதளங்களில் படு பிஸி. அதுவும் இன்ஸ்டாகிராமைப் பற்றி சொல்லவே வேண்டாம். அந்த வகையில் தனது விதவிதமான படங்களை தாறுமாறாக இன்ஸ்டாகிராமில் அப்லோட் செய்துக் கொண்டிருக்கிறார் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா.
ஜென் நிலையில் இருக்கிறாராம்...
சின்னத்திரையில் புகழ்பெற்ற இயக்குநர் திருமுருகன் இயக்கத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான தொடர் தான் நாதஸ்வரம். இந்தத் தொடரில் திருமுருகனுடன் இணைந்து பலரும் நடித்திருந்தார்கள். குடும்ப உறவுகளின் கதையை மையமாகக் கொண்ட இந்தத் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. நாதஸ்வரம் சீரியலில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் ஸ்ருதி சண்முகப்பிரியா. அதில் ராகினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து, ரசிகர்கள் மனதில் தனக்கென ஓரிடத்தைப் பிடித்தார். இப்படி கல்லூரி படிப்பையும், சீரியல் நடிப்பையும் அழகாக பேலன்ஸ் செய்தார்.
கார்டனிங்கில் ஆர்வம் அதிகம்
நாதஸ்வரம் சீரியலில் கோபியின் தங்கையாக அதுவும் ஒரு பியூட்டிஷியனாக நடித்திருந்தார் ஸ்ருதி. முதல் சீரியலிலேயே தனது திறமையை முழுமையாக நிரூபிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. இதை சிறிதும் குறைவில்லாமல் அழகாகவே நடித்து முடித்திருந்தார். நாதஸ்வரம் சீரியலில் இவர் நடித்ததற்கு பிறகு, அவருக்கு நிறைய ரசிகர்கள் கிடைக்கத் தொடங்கினர்.
ஃபேஷனிஸ்டா...
1993-ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்த ஸ்ருதி, நாதஸ்வரம் சீரியலுக்குப் பிறகு, பொன்னூஞ்சல், கல்யாண பரிசு, வாணி ராணி போன்ற சீரியல்களில் நடித்தார். தனுஷ் நடிப்பில் வெளியான ’கொடி’ திரைப்படத்திலும் நடித்தார். அதைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாரதி கண்ணம்மா தொடரிலும் நடித்தார். அதோடு ‘பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ என்ற சீரியலிலும் நடித்தார். சமீபத்தில் இந்த சீரியல் முடிவுக்கு வந்தது.
வெக்கேஷனில் ஸ்ருதி...
வாணி ராணி சீரியலில் உடன் நடித்த நவ்யா ஸ்வாமி, ஸ்ருதியின் க்ளோஸ் ஃப்ரெண்டாம். இது குறித்து முன்பு ஒரு நேர்க்காணலில் பேசிய ஸ்ருதி, “நான் ராணியோட மருமகள். நவ்யா வாணியோட மருமகள். எங்க இரண்டு பேருக்குமிடையே காம்பினேஷன் சீன்ஸ் அதிகம் இல்லைன்னாலும் நாங்க ரெண்டு பேரும் ரொம்ப குளோஸ். அப்போ செட்ல எல்லோர் கூடயும் பேசினாலும், நவ்யா கிட்ட மட்டும் தான் என் பர்சனல் விஷயங்களைப் பகிர்ந்துப்பேன். அவளும் அப்படித்தான். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்தா செம லூட்டியா இருக்கும். ஆரம்பத்துல நவ்யா ரொம்ப ஆட்டிட்யூட் காட்டுவான்னு சொன்னாங்க. அதனால நானும் அவ கூட பேசவே இல்லை. `வாணி ராணி’ சீரியல் ஷூட்டிங்கிற்காக ஆஸ்திரேலியாவிற்குப் போயிருந்தோம். அப்போதான் அவ ரொம்ப ஸ்வீட்னு தெரிஞ்சது. மனசுல தோணுறதை ஓப்பனா சொல்லிடுவா.” என்றார்.
சீரியல் நடிப்புக்கு இடையில், ஊர் சுற்றுவது ஸ்ருதிக்கு ரொம்பவும் பிடித்த ஒன்றாம். தற்போது பெங்களூரில் வெக்கேஷனில் இருக்கிறார். அதோடு ஒரே நேரத்தில் பல வேலைகளை நேர்த்தியாக செய்வதில் இவர் படு கில்லி.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”