என்னாச்சு விஜய் டிவி... இந்த ஸ்டார் ஜோடியின் ஹிட் சீரியல் நிறுத்தமா?

Star Vijay Serials stopped because of Bigg Boss Tamil News அந்த என்ட்ரி பேயாக இருந்ததால், அது பேய் கதையாக மாறியது.

Star Vijay Serials stopped because of Bigg Boss Tamil News அந்த என்ட்ரி பேயாக இருந்ததால், அது பேய் கதையாக மாறியது.

author-image
WebDesk
New Update
Star Vijay Serials stopped because of Bigg Boss Tamil News

Star Vijay Serials stopped because of Bigg Boss Tamil News

Star Vijay Serials stopped because of Bigg Boss Tamil News : சன் டிவிக்கு இணையாக விஜய் டிவி ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பிக்கொண்டிருக்கின்றது. டிஆர்பி போட்டி எப்போதுமே இந்த இரண்டு சேனல்களுக்கு இடையேதான் பெரும்பாலும் உள்ளன. அதிலும், ப்ரைம் டைம் சீரியல்களுக்கு அதிரடி போட்டி எப்போதும் உண்டு. அந்த வரிசையில், விரைவில் விஜய் டிவியில் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாவதைத் தொடர்ந்து, சில தொடர்களின் ஒளிபரப்பு நேரத்தை மாற்றப்போகிறார்களாம்.

Advertisment

அக்டோபர் 3-ம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாவதை அடுத்து, ஜாக்குலின் நடிப்பில் வெளிவந்துகொண்டிருக்கும் தேன்மொழி பிஏ சீரியல் நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து மேலும் ஒரு தொடரும் நிறுத்தப்படவுள்ளது என்கிற தகவல் கசிந்துள்ளது.

ஆம், செந்தூரப்பூவே சீரியல் இன்னும் மூன்று மாதங்களுக்கு நிறுத்தப்படுகிறதாம். இந்த செய்தி விஜய் டிவி சீரியல் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக ஒரு சீரியலையே தற்காலிகமாக நிறுத்துவது எந்த விதத்தில் சரி என்கிற வாதம் சமூக வலைத்தளங்களில் பரவலாக உள்ளது.

குடும்ப கதையாக நகர்ந்துகொண்டிருந்த இந்தத் தொடரில், ரஞ்சித்தின் முதல் மனைவி அருணா கதாபாத்திரத்தின் என்ட்ரி, 'என்ன ஒரு ட்விஸ்ட்' என்று வியக்க வைத்து. ஆனால், அந்த என்ட்ரி பேயாக இருந்ததால், அது பேய் கதையாக மாறியது. பேய் பழிவாங்கும் திரைக்கதையாக மாறிய இந்த சீரியலில், பேயாக நடிப்பவர் 'செம்பருத்தி' புகழ் பிரியா ராமன்.

Advertisment
Advertisements

இந்த வேளையில் இந்த செந்தூரப்பூவே சீரியல் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என்கிற தகவல் சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவி வருகிறது. என்றாலும், இதுபற்றிய எந்தத் தகவலும் விஜய் டிவி தரப்பிலிருந்து வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bigg Boss Tamil Vijay Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: