1000 படம் நடிச்சிட்டீங்க, இன்னும் கடன் இருக்காமே உண்மையா? பிரபல நடிகரை கேட்ட எம்.ஜி.ஆர்; அவர் உதவி செய்ய நினைத்தும் முடியாத தருணம் இதுதான்!

தமிழ் சினிமாவில் 1000 படங்களில் நடித்தும் கடன் இருந்த ஒரு நடிகருக்கு எம்.ஜி.ஆர் உதவி செய்ய முற்பட்டதாகவும் ஆனால் அது செய்ய முடியாமல் போனதாகவும் அந்நடிகர் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் 1000 படங்களில் நடித்தும் கடன் இருந்த ஒரு நடிகருக்கு எம்.ஜி.ஆர் உதவி செய்ய முற்பட்டதாகவும் ஆனால் அது செய்ய முடியாமல் போனதாகவும் அந்நடிகர் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
MGR THu

வி.கே.ராமசாமி, தமிழ் சினிமாவின் ஒரு சகாப்தமாக திகழ்ந்தவர். தனது தனித்துவமான உடல்மொழியும், நகைச்சுவை உணர்வும், குணச்சித்திர நடிப்பும் அவரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற வைத்தன. குறிப்பாக எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவருடைய பழைய இண்டர்வியூ ஒன்று எம்.ஜி.ஆர். எம். ஜி. ராமச்சந்திரன் யூடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ளது.  

Advertisment

நடிகர் வி.கே.ராமசாமி ஒரு வீடியோவில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களுடனான தனது தனிப்பட்ட நட்பையும், சில மறக்க முடியாத அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார். எம்.ஜி.ஆர் அவரை 'அண்ணே' என்று அன்புடன் அழைத்ததாகவும், இருவருக்கும் இடையே மிக நெருக்கமான உறவு இருந்ததாகவும் அவர் கூறுகிறார்.

ஒருமுறை, வி.கே.ராமசாமிக்கு பெரிய அளவில் கடன் இருந்ததை அறிந்த எம்.ஜி.ஆர், ஒரு படத்தைத் தயாரித்து அந்தக் கடனை அடைத்துவிடலாம் என்று யோசனை தெரிவித்தார். மேலும் 1000 படங்களில் நடித்தும் தங்களுக்கு இன்னும் கடன் உள்ளதா என்றும் எம்.ஜி.ஆர் கேட்டதாக கூறினார். அதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக எம்.ஜி.ஆர் உறுதியளித்தார். எம்.ஜி.ஆரின் இந்த கருணை உள்ளம் வி.கே.ராமசாமியை மிகவும் நெகிழ வைத்தது. மேலும் நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடம் கட்டுவதற்காக எம்.ஜி.ஆர் பல லட்சங்களை நன்கொடையாக வழங்கினார். 

vk ramasamy

Advertisment
Advertisements

வி.கே.ராமசாமியின் கூற்றுப்படி, நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடம் கட்டுவதற்காக எம்.ஜி.ஆர் பல லட்சங்களை நன்கொடையாக வழங்கினார். மேலும், அந்தக் கட்டிடத்தைத் திறப்பதற்காக அவரே நேரில் வந்ததாகவும் தெரிவித்தார். ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த 'காவல்காரன்' படத்தில் வி.கே.ராமசாமி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும், 'பல்லாண்டு வாழ்க' படத்தில் ஒரு சிகமங்களூர் பார்பர் காட்சியில் வி.கே.ராமசாமியின் நடிப்பு மிகவும் அருமையாக இருந்ததாக எம்.ஜி.ஆர் நேரில் பாராட்டியதாகவும் அவர் பெருமையுடன் நினைவு கூர்ந்தார்.

கலைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்து நாட்டின் முதல்வராக எம்.ஜி.ஆர் உயர்ந்தது ஒரு பெரிய அதிசயம் என்று வி.கே.ராமசாமி குறிப்பிட்டார். இது எம்.ஜி.ஆரின் கருணை, தர்ம குணம் போன்ற உயர்ந்த குணங்களால் மட்டுமே சாத்தியமானது என்றும் அவர் கூறினார்.

Mgr

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: