வேண்டா வெறுப்பா கேட்ட கதை; அதன்பின் நடந்த மேஜிக் சூப்பர்: எஸ்.எம்.எஸ் படம் உருவானது இப்படித்தான்!

சிவா மனசுல சக்தி திரைப்படம் கதை கேட்ட தருணம் குறித்து நடிகர் ஜீவா நகைச்சுவையாக கூறியுள்ளார். படம் கதையை கேட்க விருப்பம் இல்லாமல் கேட்ட நிலையில் பின்னர் கதை பிடித்து இருந்ததாகவும் அவர் கூறினார்.

சிவா மனசுல சக்தி திரைப்படம் கதை கேட்ட தருணம் குறித்து நடிகர் ஜீவா நகைச்சுவையாக கூறியுள்ளார். படம் கதையை கேட்க விருப்பம் இல்லாமல் கேட்ட நிலையில் பின்னர் கதை பிடித்து இருந்ததாகவும் அவர் கூறினார்.

author-image
WebDesk
New Update
sms

ஜீவா தனது "சிவா மனசுல சக்தி" திரைப்படம் குறித்து சினிமா விகடனுக்கு அளித்த பேட்டியில், ஆரம்பத்தில் கதையைக் கேட்க விரும்பாமல் நடித்ததாகவும், ஆனால் கதை கேட்ட பிறகு படம் நன்றாக அமையும் என்று நினைத்து நடித்ததாக கூறினார். 

Advertisment

'சிவா மனசுல சக்தி' 2009-ல் வெளியான ஜீவா நடித்த திரைப்படம், தமிழ் சினிமாவில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியது. இந்தப் படம் ஜீவாவின் திரைப் பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. இயக்குனர் ராஜேஷ் இயக்கிய இந்தப் படத்தில் ஜீவா மற்றும் அனுயா பகவத் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

படத்தின் நாயகன் சிவா, ஒரு ஆர்.ஜே. ஆவார். அவர் முன்கோபக்காரராகவும், எதற்கும் அலட்டிக் கொள்ளாதவராகவும் சித்தரிக்கப்பட்டிருப்பார். சக்தி ஒரு துடிப்பான, சுதந்திரமான பெண். ஒரு ரயில் பயணத்தில் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிறார்கள். ஆரம்பத்தில் மோதல்கள் ஏற்பட்டாலும், நாட்கள் செல்லச் செல்ல ஒருவருக்கொருவர் ஈர்க்கப்படுகிறார்கள். அவர்களின் காதலில் ஏற்படும் சச்சரவுகளும், அதை அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதும், இறுதியில் அவர்கள் ஒன்று சேர்ந்தார்களா என்பதுமே படத்தின் மையக் கருவாக அமைந்து இருக்கும்.

சமீபத்தில், சினிமா விகடனுக்கு அளித்த பேட்டியில், ஜீவா மனம் திறந்து பேசியுள்ளார். "ஆரம்பத்தில், 'சிவா மனசுல சக்தி' படத்தின் கதையைக் கேட்கும் போது எனக்குப் பெரிய ஆர்வம் இல்லை. ஒருவித வேண்டா வெறுப்புடன்தான் கதையைக் கேட்டேன்," என்று ஜீவா குறிப்பிட்டுள்ளார். ஆனால், கதை சொல்ல சொல்ல அவரது எண்ணம் மாறியிருக்கிறது. "கதை முழுவதும் கேட்ட பிறகு, அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை. அந்த ஞாயிற்றுக்கிழமை மிக நல்ல நாளாக மாறிவிட்டது," என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Advertisment
Advertisements

ராஜேஷ் இயக்கிய இந்தப் படம், ஜீவாவை ஒரு நகைச்சுவை நடிகராகவும், ரொமான்டிக் ஹீரோவாகவும் ரசிகர்கள் மத்தியில் நிலைநிறுத்தியது. சந்தானத்தின் நகைச்சுவை, யுவன் சங்கர் ராஜாவின் இசை, மற்றும் அழகான காதல் காட்சிகள் இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன. 'சிவா மனசுல சக்தி' வெளியாகி இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும், ரசிகர்கள் மத்தியில் இன்றும் ஒரு ஃபேவரிட் படமாக உள்ளது. ஜீவாவுக்கு மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவுக்கும் இது ஒரு முக்கியமான படம் என்பதில் சந்தேகமில்லை.

வேண்டாவெறுப்பா ஒரு Sunday ராஜேஷ்கிட்ட கதை கேட்டேன்!

"வேண்டாவெறுப்பா ஒரு Sunday ராஜேஷ்கிட்ட கதை கேட்டேன்!" - ஜீவா #Jiiva | #SivaManasulaSakthi | #Rajesh

Posted by VikatanTv on Friday, February 21, 2025
Jiiva

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: