தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் அடுத்து தயாரிக்கும் படத்தில் நடிகர் சிம்பு நாயகனாக நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் உலக நாயகன் என்று போற்றப்படுபவர் கமல்ஹாசன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானி நடிகர் பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமையுடன் வலம் வரும் இவர், 4 ஆண்டு இடைவெளிக்கு பிறகு விக்ரம் படத்தில் நடித்திருந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியானது.
கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்த இந்த படம் 400 கோடிக்கு மேல் வசூலித்து பெரிய சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன் அடுத்தடுத்து படங்களை கமிட் செய்து வருகிறார். அதேபோல் அவரது ராஜ்கமல் நிறுவனமும் அடுத்தடுத்து படங்களை தயாரிக்கும் அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது நடிகர் சிம்பு நடிக்கும் 48-வது படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளது. தற்காலிகமாக எஸ்.டி.ஆர் 48 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பு குறித்த படத்தின் மோஷன் போஸ்டரை ட்விட்டரில் பகிர்ந்துள்ள சிம்பு, “கனவுகள் நனவாகும்” என்று பதிவிட்டுள்ளார். கமல்ஹாசனின் விக்ரம் மற்றும் இந்தியன் 2 படங்களுக்கு இசையமைத்த அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார். இவர்கள் இருவரும் இணையும் முதல் படம் இதுவாகும். ஆனாலும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் விவரங்களை வெளியாகவில்லை.
Dreams do come true 😇#STR48#Ulaganayagan #KamalHaasan #Atman #SilambarasanTR #BLOODandBATTLE #RKFI56_STR48@ikamalhaasan @SilambarasanTR_ @desingh_dp #Mahendran @RKFI @turmericmediaTM @magizhmandram pic.twitter.com/QxdCkUPFo9
— Silambarasan TR (@SilambarasanTR_) March 9, 2023
ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சமீபத்தில் அறிவித்த இரண்டாவது முயற்சி இது. எஸ்.டி.ஆர் 48 க்கு முன், கமல் மணிரத்னம் இயக்கும் தனது 234வது படத்திதை தனது நிறுவனம் தயாரிக்கும் என்று அறிவித்திருந்தார். ஆனால் தற்போது சிம்பு படம் முதலில் தயாரிக்கப்பட உள்ளது. அதேபோல் கமல் தற்போது லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்கு பிறகு கமல் மணிரத்னம் மற்றும் மகேஷ் நாராயணன் ஆகியோருடன் இணைய உள்ள நிலையில், அடுத்து லோகேஷ் கனகராஜின் விக்ரம் 2 படத்திலும் விக்ரம் வேடத்தில் நடிக்கவுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil