New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/03/simbu-1.jpg)
simbu-1
சிம்புவின் அடுத்தப்படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
simbu-1
STR 45 : ’வந்தா ராஜாவா தான் வருவேன், 90 எம்.எல்” ஆகிய இரண்டு படங்கள் நடிகர் சிம்புவின் நடிப்பில் இந்தாண்டு வெளியாகியது.
இந்நிலையில் நடிகை ஹன்ஸிகாவுடன் மஹா, இயக்குநர் வெங்கட் பிரபுவின் ’மாநாடு’ ஆகியப் படங்களில் அவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது சிம்புவின் அடுத்தப்படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
மெகா பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை கே.இ.ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. நர்தன் எனும் புதுமுக இயக்குநர் இயக்கும் இப்படத்தில் கெளதம் கார்த்திக்கும் நடிக்கிறார். பாடல்களை மதன் கார்க்கி எழுதுகிறார். சிம்புவின் 45-வது படமாக உருவாகும் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது ஸ்டூடியோ கிரீன் நிறுவனம்.
We're Absolutely Thrilled to be Teaming up with, ????#STR????
for the First Time ????
A Mega Budget Action Thriller Starring #STR ????and @Gautham_Karthik ????
Directed by the Super Talented #Narthan ????
✍️ @madhankarky#STR45 pic.twitter.com/G1zZiST0an
— Studio Green (@StudioGreen2) April 21, 2019
நாயகி, இசையமைப்பாளர் உட்பட மற்ற விபரங்களை விரைவில் அறிவிக்க இருக்கிறது படக்குழு.
இந்நிலையில் சிம்புவின் அடுத்தப்பட அறிவிப்பால் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.