scorecardresearch

பிரபல சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் மரணம்

பிரபல சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் முதுமை காரணமாக உடல் நலக் குறைவு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 92.

Judo Rathnam, KK Judo Rathnam, Stunt Master Judo Rathnam passed away, ஜூடோ ரத்னம், பிரபல சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் மரணம், ஜூடோ ரத்னம் மரணம், Stunt Master Judo Rathnam, KK Judo Rathnam dies, Judo Rathnam death

பிரபல சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் முதுமை காரணமாக உடல் நலக் குறைவு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 92.

1970-களில் தொடங்கி பல தமிழ் திரைப்படங்களில் இடம்பெற்ற மிரட்டலான சண்டைக் காட்சிகளை அமைத்து பிரபலமானவர் சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம்.
திரைப்படங்களில் சண்டை பயிர்சியாளராக பிரபலமாக அறியப்பட்ட ஜூடோ ரத்தினம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 100க்கும் மேற்பட்ட படங்களில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாத் படங்களில் சண்டைக் காட்சிகள் ரசிகர்கள் ஈர்க்கும் படியாக அமைந்தற்கு ஜூடோ ரத்தினம் முக்கிய காரணம். ஏனென்றால், ரஜினிகாந்த் நடித்த படங்களில் 46 படங்களுக்கு ஜூடோ ரத்தினம்தான் சண்டை பயிற்சியாளர்.

முதுமை காரணமாக ஓய்வில் இருந்த சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் வயது முதுமை காரணமாக உடல் நலக் குறைவு ஏற்பட்டு வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 92. இவருடைய மறைவு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Stunt master judo rathnam passed away