வசூலில் ரூ. 100 கோடி குவித்த திகில் காமெடி படம் ஓ.டி.டி ரிலீஸ்: ரசிக்க ரெடியா?

கன்னட சினிமாவில் ரூ. 5 கோடி பட்ஜெட்டில் உருவாகி, ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்து மாபெரும் வெற்றிபெற்ற திகில் காமெடி திரைப்படமான 'சூ ஃப்ரம் சோ', இப்போது ஓ.டி.டி தளத்தில் வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது. ரசிக்க நீங்கள் ரெடியா?

கன்னட சினிமாவில் ரூ. 5 கோடி பட்ஜெட்டில் உருவாகி, ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்து மாபெரும் வெற்றிபெற்ற திகில் காமெடி திரைப்படமான 'சூ ஃப்ரம் சோ', இப்போது ஓ.டி.டி தளத்தில் வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது. ரசிக்க நீங்கள் ரெடியா?

author-image
WebDesk
New Update
su from so

கன்னடத்தில் வெற்றிப்படமான சூ ஃப்ரம் சோ திரைப்படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ராஜ் பி ஷெட்டி தயாரிப்பில் ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான'சூ ஃப்ரம் சோ' திகில் காமெடி திரைப்படம் ஜூலை 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, ஒரே மாதத்தில் ரூ.100 கோடி வசூலித்து கன்னட சினிமா வரலாற்றில் புதிய சாதனை படைத்தது. இந்தப் படத்தின் வெற்றி, குறைந்த பட்ஜெட்டில் தரமான படைப்பை உருவாக்க முடியும் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

Advertisment

ஜெயதீப் துமினாட் இயக்கத்தில் உருவான இந்த நகைச்சுவையான பேய்க்கதை, நாளை (செப்டம்பர் 5) முதல் ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளங்களில் தமிழ் உட்படப் பல இந்திய மொழிகளில் பார்த்து மகிழலாம். இந்தப் படத்தைப் ஒ.டி.டி-யில் பார்த்து ரசிக்க நீங்கள் ரெடியா?

ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்த கன்னடத் திரைப்படமான 'சூ ஃப்ரம் சோ' (Suu From Soo), ஒரு சுவாரசியமான திகில் நகைச்சுவைக் கதை. ஒரு கிராமத்தில் வசிக்கும் பிரியங்கா என்ற பெண், தனது தந்தையின் விருப்பப்படி ஒரு தந்திரிக்காரரைச் சந்திக்கிறார். அப்போது, ஒரு பேய் அவளுக்குள்ளாகப் புகுந்துவிடுகிறது. அந்தப் பேய் அவள் காதலிக்கும் சூர்யாவைப் பார்த்து, தனது முன்னாள் காதலன் என்று நினைக்கிறது. அதே சமயம், சூர்யாவைப் பின்தொடரும் ரகசியக் காவல் துறை அதிகாரி ஒருவரும், இந்தப் பேயை விரட்ட வரும் மற்றொரு தந்திரிக்காரரும் இந்தப் பேய்க்கதையில் இணைகின்றனர். பேய்க்கும், காதலுக்கும் இடையிலான இந்த நகைச்சுவையான போராட்டமே படத்தின் மையக்கரு.

திரையரங்குகளில் கொண்டாடப்பட்ட இந்த திகில் காமெடி திரைப்படம், இப்போது உங்கள் வீடுகளுக்கும் வரவுள்ளது. பேய்களும், காமெடியும் கலந்த இந்த அனுபவத்திற்கு நீங்களும் தயாராகுங்கள்.

OTT

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: