ஷங்கர் இயக்கத்தில், ராம்சரண் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'கேம் சேஞ்சர்' திரைப்படம் வரும் ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனிடையே, இப்படத்திற்கு பிரபல எழுத்தாளரும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு. வெங்கடேசன் பங்களித்திருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே, சு. வெங்கடேசனின் பிரம்மாண்ட நாவலான வேள்பாரியை, திரைப்படமாக்கும் உரிமத்தை இயக்குநர் ஷங்கர் பெற்றுள்ளார். இந்நிலையில், 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் ராம்சரணின் கதாபாத்திரம் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இந்த பாத்திரத்திற்கு சு வெங்கடேசனின் அனுபவம் மற்றும் ஆற்றலை பயன்படுத்த இயக்குநர் ஷங்கர் விரும்பியுள்ளார்.
அதனடிப்படையில், இந்த பாத்திர வடிவமைப்பில் சு வெங்கடேசன் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, படப்பிடிப்பு தளத்திற்கு சென்றும் சு. வெங்கடேசன் தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அடுத்த ஆண்டு ஜனவரி ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“