/indian-express-tamil/media/media_files/2025/09/06/download-3-2025-09-06-15-33-54.jpg)
தமிழ் திரைப்படத் துறையில் தனக்கென ஒரு உறுதியான இடத்தை பிடித்து, மக்களிடையே அதிகமான மதிப்பையும் மரியாதையும் பெற்றவர் கேப்டன் விஜயகாந்த். திரைப்பட உலகில் தனது வருகையிலிருந்தே, அவர் கொண்டிருந்த மனிதாபிமானம், நெறிப்புத்தி, மற்றும் சமூக பொறுப்புணர்வு ஆகியவை அவரது நடிப்பிலும், நடத்தை யிலும் தெளிவாகப் பிரதிபலித்தன. இதன் காரணமாகவே, திரைத் துறையிலும், ரசிகர்கள் மனதிலும், “கருப்பு எம்ஜிஆர்” என்ற சிறப்புப் பெயருடன் புகழ் பெற்றார்.
மக்கள் நலத்திற்காக எப்போதும் முன் வருவார்; தன்னுடைய சுக, வசதிகளைப் பற்றிய கவலை இல்லாமல், பிறரின் வாழ்வை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபடுவதை தன் கடமையாகக் கொண்டிருந்தார். அவரது சமூக சேவைகள், அரசியல் வாழ்வில் எடுத்த அதிரடி முடிவுகள், மற்றும் பலர் நலனுக்காக அவர் செய்த தியாகங்கள், அவரை வெறும் நடிகராக அல்லாது, ஒரு நற்பண்புள்ள மனிதராகவும், மக்களுக்காக வாழ்ந்த தலைவராகவும் உயர்த்தின.
எதிலும் நேர்மை, நெறி மற்றும் நேர்மையான அணுகுமுறை என்பது அவரது வாழ்க்கையின் அடிப்படை. அந்த அடிப்படையில்தான், திரை உலகிலும் அரசியலிலும் பெருமை பெற்றவர். அதன் விளைவாகவே, இன்று வரை அவர் பெரும்பாலான மக்களால் மதிக்கப்படுகிறார்.
சாப்பாடு விஷயத்தில் அதிக கவனம் செலுத்துபவர். தான் சாப்பிடவில்லை என்றாலும் மற்றவர்களின் பசியை போக்கக் கூடியவராக திகழ்ந்தார். ஆரம்பகாலங்களில் இருந்தே இவருடன் துணையாக இருந்தவர் இவரின் நண்பரான இப்ராஹிம் ராவுத்தர். சொல்லப்போனால் ராவுத்தரால் தான் விஜயகாந்த் ஹீரோவாக அறியப்பட்டார்.
எந்த விஷயமானாலும் அந்த காலத்தில் ராவுத்தரை தாண்டித்தான் விஜயகாந்திடம் போகும். அந்த அளவுக்கு இருவரும் இணைபிரியாத நண்பர்களாக இருந்தார்கள். ஒரு சமயம் பஞ்சு அருணாச்சலம் தயாரிப்பில் அலெக்ஸாண்டர் திரைப்படம் விஜயகாந்தை தேடி போனது.
அவரிடம் கதை சொல்லி விட்டு திரும்பி வந்தவர் விஜயகாந்த் பஞ்சு அருணாச்சலத்தின் மகனும் நடிகருமான பஞ்சு சுப்புவை அழைத்து இந்த கதை எனக்கு பிடிக்கவில்லை. அதை எப்படி உன் அப்பாவிடம் சொல்லுவது. நீ எதாவது சொல்லி வேறு கதையை ஏற்பாடு செய்ய சொல்கிறாயா? என்று கேட்டாராம். ஆனால் நான் சொன்னேன் என்று சொல்லாதே என்றும் கூறியிருக்கிறார்.
சுப்புவும் சரி என்று சொல்ல ராவுத்தர் சுப்புவை பார்த்ததும் கேப்டன் எதுவும் சொன்னாரா? என்று கேட்டாராம். அதற்கு ஆமாம் இந்த கதை பிடிக்கவில்லை என்று அப்பாவிடம் சொல்ல சொன்னார் என்று சொல்லியிருக்கிறார். உடனே ராவுத்தர் அதெல்லாம் வேண்டாம். நான் கேப்டனை பார்த்துக் கொள்கிறேன், கதை சூப்பர் கதை. சொல்ல வேண்டாம் என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்.
ராவுத்தரின் வற்புறுத்தலில் நடிக்க வந்த கேப்டன் படப்பிடிப்பு செல்ல செல்ல ஒரு நாள் சுப்புவை பார்த்து அழைத்திருக்கிறார். அப்பாவிடம் சொல்ல சொன்னேனே சொன்னீயா? என்று கேட்க சுப்பு இல்லை என்று சொல்லியிருக்கிறார். அதற்கு கேப்டன் நல்ல வேளை சொல்லவில்லை, இல்லையென்றால் இந்த துலுக்கன் கத்தியிருப்பான், ஆனால் நடிக்க நடிக்கத்தான் கதை பிடித்திருக்கிறது என்று கேப்டன் சொன்னாராம். இந்த செய்தியை பஞ்சு சுப்பு ஒரு பேட்டியில் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.