/indian-express-tamil/media/media_files/2025/07/07/subramaniyapuram-2025-07-07-16-36-06.jpg)
சுப்பிரமணியபுரம் vs மோகன்லால்: க்ளைமாக்ஸ் காட்சிக்கு இன்ஸ்பிரேஷன் இந்தப் படம்: சசிகுமார் ஓபன் டாக்! -
2008-ம் ஆண்டு வெளியான சசிக்குமாரின் சுப்ரமணியபுரம் திரைப்படம், தமிழ் சினிமா வரலாற்றில் மைல்கல்லாகப் பதிவாகியுள்ளது. மதுரை மண்ணின் யதார்த்தத்தையும், அங்கு புழங்கிய மனிதர்களின் உணர்வுபூர்வமான வாழ்க்கையையும், நட்பு, துரோகம், பழிவாங்கல் போன்ற மனித உறவுகளின் சிக்கலையும் மிகையின்றிப் பதிவுசெய்த இத்திரைப்படம், ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றது.
1980-களின் பின்னணியில் அமைக்கப்பட்டிருக்கும் இக்கதை, மதுரை சுப்ரமணியபுரத்தைச் சுற்றியுள்ள சில நண்பர்களின் வாழ்க்கையைப் பேசுகிறது. அஞ்சாநெஞ்சன், பரமன், அழகர், காசி, துளசி ஆகிய நண்பர்கள் குழுவின் நட்பு, அவர்களது வெகுளித்தனம், அன்றாட வாழ்வின் சந்தோஷங்கள் எனப் படம் தொடங்குகிறது. சிறிய தவறான முடிவின் காரணமாக, அவர்களின் வாழ்க்கை எப்படித் திசைமாறி, இறுதியில் சோகத்தில் முடிகிறது என்பதே சுப்ரமணியபுரத்தின் மையக்கரு. சசிக்குமார் (பரமன்), ஜெய் (அழகர்), கஞ்சா கருப்பு (துளசி), சமுத்திரக்கனி (காசி), மற்றும் ஸ்வாதி ரெட்டி (துளசி) ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களுக்கு உயிர் ஊட்டியிருந்தனர். குறிப்பாக சசிக்குமாரின் நடிப்பு, படம் முழுவதும் கச்சிதமாகப் பொருந்திப் போனது.
சுப்ரமணியபுரம் வெறும் ஒரு பழிவாங்கும் கதை மட்டுமல்ல. இது அக்கால சமூகத்தில் நிலவிய அரசியல் தலையீடுகள், இளைஞர்களின் எதிர்காலத்தின் மீதான தாக்கம், நட்பு என்ற பெயரில் நடக்கும் துரோகங்கள், குடும்ப உறவுகளின் முக்கியத்துவம் எனப் பல விஷயங்களைப் பேசியது. இன்றளவும், சிறந்த தமிழ்ப் படங்களின் பட்டியலில் சுப்ரமணியபுரம் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
அண்மையில், ரெட்நூல் நடத்திய நேர்க்காணலில் பங்கேற்று பேசிய நடிகர் சசிக்குமார், 1979 ஆம் ஆண்டு பரதன் இயக்கத்தில் வெளியான மோகன்லாலின் தாழ்வாரம் படத்தின் ஒரு காட்சி தன்னை வெகுவாக இன்ஸ்பிரேஷன் செய்ததாகக் குறிப்பிட்டார். அதனை 2008-ல் வெளியான தனது சுப்ரமணியபுரம் படத்தில் ஒருகாட்சி வைத்ததாகவும் சசிகுமார் நினைவுகூர்ந்து பேசினார்.
1979-ல் பரதன் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம், மோகன்லாலின் ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமானதொரு படமாகக் கருதப்படுகிறது. 'தாழ்வாரம்' திரைப்படம் ஆழமான கதைக்களத்தை கொண்டது. கேரளாவின் பசுமையான மலைப்பகுதிகளில் அமைந்துள்ள தொலைதூர கிராமத்தில், தன் குடும்பத்துடன் அமைதியான வாழ்க்கை வாழும் இளைஞன் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத சம்பவங்களே இப்படத்தின் முக்கிய கதை. ஒரு எளிய கிராமத்து இளைஞனின் கனவுகள், பயங்கள், அவனது வாழ்க்கைச் சூழல் என அனைத்தையும் மோகன்லால் மிக இயல்பாக வெளிப்படுத்தியிருந்தார். குறிப்பாக, அவரது கதாபாத்திரத்தின் உணர்ச்சி மாற்றங்கள், பார்வையாளர்களைப் படத்துடன் ஒன்றிப் போக வைத்தன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.