சக நடிகருடன் சித்ரா நடனம் ஆடியதுதான் பிரச்னையா? தற்கொலை வழக்கில் திருப்பம்

actress Chithra Murder Case : சின்னத்திரை நடிகை சித்ரா கொலை வழக்கில் திடீர் திருப்பமாக ஹேமந்த் பேசிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

actress Chithra Murder Case : சின்னத்திரை நடிகை சித்ரா கொலை வழக்கில் திடீர் திருப்பமாக ஹேமந்த் பேசிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

author-image
WebDesk
New Update
சக நடிகருடன் சித்ரா நடனம் ஆடியதுதான் பிரச்னையா? தற்கொலை வழக்கில் திருப்பம்

சின்னத்திரையில் தனது இயல்பான நடிப்பின் மூலம் அதிகமான ரசிகர்களை பெற்றவர் நடிகை சித்ரா. விஜேவாக தனது சின்னத்திரை வாழ்க்கையை தொடங்கிய அவர், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டார்ஸ் சீரியலின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். இந்த சீரியலில் அவர் நடித்த முல்லை கதாப்பாத்திரம் தமிழகத்தில் பேரும் பிரபலமானது.

Advertisment

தொடர்ந்து சின்னத்திரையில் ஆதிக்கம் செலுத்தி வந்த அவர், கடந்த டிசம்பர் மாதம் 9-ந்தேதி சென்னை பூந்தமல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில்,  தூக்கில் தொங்கிய நிலையில் சடலாமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது மரணத்தில் தற்போதுவரை பெரும் மர்மம் நீடித்து வரும் நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சித்ராவின் காதல் கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஆனாலும் இந்த வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில், மரணமடைந்த சித்ராவின் தாயரார் ஹேமந்த்- தான் தனது மகளை கொலை செய்தார் என கூறி வருகிறார். இந்த வழக்கு காவல்துறையினர் விசாரணையை துரிதப்படுத்தி வருகின்றனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்திய ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ  சித்ராவின் நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் என பலரிடம் விசாரணை நடத்தி 16 பக்க அறிக்கை சமர்பித்தார். ஆனால் அந்த அறிக்கை தொடர்பாக எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில், தனது மகள் சித்ராவின் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என சித்ராவின் தாயார் முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து இந்த வழக்கு தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2015-ம் ஆண்டு மருத்துவ சீட்டு மோசடி தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹேமந்த் மீதான வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment
Advertisements

இந்நிலையில், சித்ராவின் மரணம் தொடர்பான வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி ஹேமந்த் மனுதாக்கல் செய்திருந்த நிலையில், இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கொடுக்க கூடாது என்று கூறி ஹேமந்தின் நண்பரான காஞ்சிபரத்தை சேர்ந்த சையத் ரோகித் என்பவர் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். ஹேமந்த் குறித்து பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ள ரோகித், ஹேமந்த்-க்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும், சித்ராவின் மீது சந்தேகப்பட்டு அவரை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் சித்ரா மற்றும் ஹேமந்த் குறித்து பல தகவல்கள் தெரிந்த என்னை காவல்துறையினர் விசாரணைக்கு அழைக்கவில்லை என்று தெரிவித்துள்ள அவர், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சித்ரா ஒருவருடன் நடனமாடியது தொடர்பாக அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் சித்ரா மரணமடைந்த அன்று ஹேமந்த் தனது நண்பர் ஒருவருடன் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில், ஆமா செல்லக்குட்டி பிரமிஸ் பண்ண மாதிரி இன்னைக்கு அவன் கூட ஃபேர் டான்ஸ் எல்லாம் ஆடல இல்ல அப்படின்னு கேட்டேன். அப்போ அவ ஆடினேன்னு சொன்னால், எனக்கு கண்ணே கலங்கிடுச்சி.

ஏண்டி! இப்படி பண்றன்னு சொன்னேன். வெளிய தம் அடிக்க போனேன் வந்தேன், ஏதோ ஒரு மாதிரியே உட்கார்ந்துக்கிட்டு இருக்கா?... வெளிய புல்வெளி மாதிரி இருக்கும் அங்க உட்கார்ந்து கூப்பிட்டேன். வா சித்துன்னு... இதோ வர்றேன்னு சொன்னவள் டக்குன்னு கதவை மூடிட்டால். திறக்கவே இல்ல. ஜன்னலை தட்டிப்பார்த்தும் திறக்கல. அப்புறம் போய் ரூம் சாவி வாங்கிட்டு வந்து திறந்து பார்த்தால் என் கண்ணு முன்னாடி தொங்குறாடா? என பேசியிருப்பது பதிவாகியுள்ளது.

இதன் மூலம் சித்ரா வேறு ஒரு நடிகருடன் நடனமாடியதால் ஹேமந்துடன் பிரச்சனையானது தெரியவந்துள்ளது. தற்போது இந்த ஆடியோ சித்ரா கொலை வழக்கில் திடீர் திருப்பமாக அமைந்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: