Advertisment

ஞானவேல் ராஜா பற்ற வைத்த நெருப்பு... இயக்குநர் அமீர் பற்றி உயர்வாக பதிவிட்ட சுதா கொங்காரா

இயக்குநர் அமீர் இயக்கிய ராம் திரைப்படத்தைப் பற்றி 'மேக்கிங் வரை, ஒன்னும் வரல' என சுதா கொங்கரா கருத்து தெரிவித்ததாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியது சர்ச்சையான நிலையில், இயக்குநர் சுதா கொங்காரா பதிலளித்துள்ளார்

author-image
WebDesk
New Update
gnanavel Raja Sudha Kongara Ameer

இயக்குநர் அமீர் பற்றி உயர்வாக பதிவிட்ட சுதா கொங்காரா

இயக்குநர் அமீர் இயக்கிய ராம் திரைப்படத்தைப் பற்றி 'மேக்கிங் வரை, ஒன்னும் வரல' என சுதா கொங்கரா கருத்து தெரிவித்ததாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியது சர்ச்சையான நிலையில், இயக்குநர் சுதா கொங்காரா பதிலளித்து பதிவிட்டுள்ளார்.

Advertisment

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அண்மையில் அளித்த பேட்டியில், அமீர் இயக்கிய ராம் படத்தைப் பற்றி இயக்குனர் சுதா கொங்காரா, ‘மேக்கிங் வரை, ஒன்னும் வரல’ என்று கம்மென்ட் அடித்ததாக கூறினார். மௌனம் பேசியதே, பருத்தி வீரன் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய அமீர் பற்றி சுதா கொங்காரா கம்மென்ட் அடித்ததாக  ஞானவேல் ராஜா பற்ற் வைத்த நெருப்பு சமூக வலைதளங்களில் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. அமீர் ரசிகர்கள், நெட்டிசன்கள் பலரும் சுதா கொங்காராவுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். 

இந்நிலையில், இயக்குனர் சுதா கொங்காரா தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் இயக்குனர் அமீர் பற்றி உயர்வாக பதிவிட்டுள்ளார்.

அதில் சுதா கொங்காரா கூறியிருப்பதாவது: “பிப்ரவரி 2, 2016, இயக்குனர் அமீர் அண்ணாவிடமிருந்து எனக்கு ஒரு போன் வந்தது... நான் பிரசாத் ஸ்டுடியோவிற்கு வெளியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன்...  எனக்கு அது நன்றாக நியாபகம் இருக்கிறது, ஏன் என்றால், இறுதி சுற்று படத்திற்காக எனக்கு முதல் முதலாக திரையுலகில் இருந்து போன் செய்து பாராட்டிய சிலரில் அவரும் ஒருவர்... நான் ஒரே ஒரு விஷயம்தான் அவரிடம் சொன்னேன்... என் படத்தில் வந்த மதியின் கதாப்பாத்திரம் முத்தழகின் பாதிப்புதான் என்று. ஒரு ஆணின் எழுத்துக்களில் ஒரு பெண் கதாப்பாத்திரம் இவ்வளவு முழுமையாக எழுதப்பட்டது அதுவே முதல் முறை என்றும் அவரிடம் சொன்னேன். நான் என் படத்தில் மதி மற்றும் பொம்மி கதாபாத்திரங்களில் நடித்த நடிகைகளிடம் பருத்தி வீரன் படத்தை பார்த்துவிட்டு வருமாரு தான் சொல்லி அனுப்பினேன். அதுதான் தமிழ் சினிமாவில்  தடம் பதித்த மிகச்சிறந்த ஓர் இயக்குனருக்கு நான் செய்யும் மரியாதை... இதுதான்  நான் சொல்ல விரும்பும் விஷயம்.. நன்றி...” என்று பதிவிட்டுள்ளார்.

ஆனாலும், வம்பு செய்யும் நெட்டிசன்கள், அதெல்லாம் இருக்கட்டும், அமீரின் ராம் படத்தைப் பற்றி நீங்க என்ன சொன்னீங்க என்று அதை மட்டும் சொல்லுங்க என்று கேட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ameer Sultan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment