Sudha Raghunathan : பத்ம பூஷண் விருதுக்கு சொந்தக்காரரான கர்நாடக இசைப் பாடகி, சுதா ரகுநாதன் கடந்த 2-ம் தேதி கின்னஸ் சாதனையும் படைத்திருக்கிறார். இதைப்பற்றி பேசுகையில், “இது ஒரு தொலைக்காட்சியின் ஐடியா” என்கிறார் சுதா.
படிப்புக்கு வயசேது? 105 வயதில் 4-ம் வகுப்பு தேர்வுக்கு தகுதிப் பெற்ற மூதாட்டி
தொடர்ந்த அவர், ”இந்த முயற்சியின் நிறுவனர், சாக்ஸபோன் கலைஞர், ஈ.ஆர்.ஜனார்த்தன் (சாக்ஸபோன் ஜனார்த்தன் என்று அழைக்கப்படுபவர்). பின்னணியில் எங்களுக்கு மூளையாக செயல்பட்டார். கர்நாடக இசையை பிரபலப்படுத்தவும், சமூகத்துக்காகவும், மாநிலத்தின் கலை மற்றும் கலாச்சாரத்திற்காகவும் ஏதாவது செய்ய அவர் விரும்பினார். பின்னர் நாங்கள் கின்னஸ் அதிகாரிகளை தொடர்புக் கொண்டோம். இறுதியாக, இவை அனைத்தும் இசை – நடன வடிவத்தில் அழகாக ஒன்றிணைந்தன. இதனால் ஒரே நாளில் மூன்று கின்னஸ் சாதனைகளை செய்ய முடிந்தது! லண்டனில் இருந்து அதிகாரிகள் வந்து, நாங்கள் செய்தவற்றிற்கு சான்றிதழ் அளித்தனர்” என்றார்.
திருவன்மியூரில் உள்ள ராமச்சந்திர கன்வென்ஷன் சென்டரில் ஒரு மெகா நிகழ்வாக நடந்திருக்கிறது அந்த நிகழ்ச்சி. கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் அளவுக்கு அவர்கள் என்ன செய்தார்கள் என நினைக்கிறீர்களா. இதோ கீழே குறிப்பிடுகிறோம்.
மிகப்பெரிய கர்நாடக இசைக்குழு – 700 பாடகர்கள், இசைக்கலைஞர்கள் ஒன்றாக பெர்ஃபார்ம் செய்திருக்கிறார்கள். அதற்கு குச்சிப்புடி நடனமும், பரதநாட்டியமும் ஆடியிருக்கிறார்கள் கலைஞர்கள்.
மிகப்பெரிய குச்சிபுடி நடனம் – 1,183 குச்சிபுடி நடனக் கலைஞர்கள் ஆடியிருக்கிறார்கள்.
இன்றைய செய்திகள் Live : நடிகர் விஜய் வீட்டில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை
மிகப்பெரிய பரதநாட்டிய நடனம் – 436 பரதநாட்டிய நடனக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் நடனமாடியிருக்கிறார்கள். ஆக, ஒரே நேரத்தில் 3 கின்னஸ் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்கள் சுதா ரகுநாதன் அண்ட் டீம்.