Advertisment

பணம் கேட்ட பெண்ணுக்கு ரூ1000 வழங்கிய ஷாரூக் கான் மகள்; நெட்டிசன்கள் பாராட்டு

பணம் கேட்ட பெண்ணிடம் ரூ.1000 கொடுத்த சுஹானா கான்; ஷாருக்கான், கௌரி கானின் வளர்ப்பை வாழ்த்தும் நெட்டிசன்கள்; வைரல் வீடியோ

author-image
WebDesk
New Update
suhana khan

நடிகர் ஷாருக்கானின் சுஹானா கானை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். (புகைப்படம்: வரின்டர்ட்சாவ்லா)

நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் சமீபத்தில் ஒரு பெண்ணிடம் காட்டிய பெருந்தன்மைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. விரைவில் நடிகையாக உள்ள சுஹானா கான் தனது தாயுடன் ஒரு உணவகத்தில் இருந்து வெளியே வந்துக் கொண்டிருந்தார், அப்போது ஒரு பெண் அவரிடம் வந்து பிச்சை கேட்டார்.

Advertisment

சுஹானா முதலில் ஒரு 500 ரூபாய் நோட்டைக் கொடுத்தார், அந்தப் பெண் மகிழ்ச்சியுடன் அதை வாங்கிக் கொண்டார். பின்னர், அந்தப் பெண்ணிடம் மற்றொரு 500 ரூபாய் நோட்டைக் கொடுத்தார் சுஹானா. உடனே அந்தப் பெண் மகிழ்ச்சியுடன் காற்றில் கைகளை வீசி, சத்தமாக மகிழுந்து சிரித்தார்.

இதையும் படியுங்கள்: ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி ரத்து: ரசிகர்கள் திரும்பி செல்வதால் போக்குவரத்து நெரிசல்!

பின்னர் சுஹானா தனது காரில் ஏறி சென்று விட்டார். அவரது செயல் இணையத்தில் இதயங்களை வென்று வருகிறது. நெட்டிசன்கள், எப்போதும் போல், தங்கள் கருத்துக்களைப் பகிரத் தயங்கவில்லை. அவர்களில் ஒருவர் பாப்பராசி கணக்கின் இடுகையின் கருத்துகள் பிரிவில், "அவர் மிகவும் பணிவான உதவுபவர்" என்று எழுதினார், மற்றொருவர் ஷாருக் மற்றும் கௌரி கானைப் பாராட்டி, " சிறந்த வளர்ப்பு (இதய எமோஜிகள்)" என்று எழுதினார். மற்றொருவர், “இதில் அவளது அதிர்வை நான் விரும்புகிறேன். புன்னகை. பெருந்தன்மை. பணத்தை மீண்டும் கொடுப்பது,” என்று பதிவிட்டார்.

நெட்ஃபிளிக்ஸிற்காக ஜோயா அக்தர் இயக்கும் தி ஆர்ச்சிஸ் திரைப்படத்தின் இந்தியத் தழுவல் மூலம் சுஹானா திரையில் அறிமுகமாக உள்ளார். கிளாசிக் காமிக் அடிப்படையில் உருவாகும் இப்படத்தில் இளம் நட்சத்திரம் வெரோனிகா லாட்ஜ் வேடத்தில் நடிக்க உள்ளார். Netflix ஒரிஜினலில் குஷி கபூர், அகஸ்தியா நந்தா, டாட், மிஹிர் அஹுஜா, வேதாங் ரெய்னா மற்றும் யுவராஜ் மெண்டா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Shah Rukh Khan Cinema Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment