Advertisment
Presenting Partner
Desktop GIF

ஷூட்டிங் தளத்தில் தவறாக நடந்த நபர்.. மணிரத்னம் செய்த செயல்; சுஹாசினி பகீர் தகவல்

மணிரத்னம் தனது படப்பிடிப்பு தளத்தில் தகாத முறையில் நடந்து கொண்ட நபரை வெளியேற்றியதாக சுஹாசினி மணிரத்னம் தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
Suhasini

கோவாவில் 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. 
இதல் முதல் குழு விவாதத்தில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் சினிமா பற்றிய  உரையாடல் நடைபெற்றது.

Advertisment

நடிகரும் தயாரிப்பாளருமான வாணி திரிபாதி டிகூவால் நெறியாளராக கலந்து கொண்ட நிகழ்ச்சியில் திரைப்படத் தயாரிப்பாளர் இம்தியாஸ் அலி, நடிகர்கள் சுஹாசினி மணிரத்னம், குஷ்பூ சுந்தர் மற்றும் பூமி பெட்னேகர் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

சுஹாசினி மணிரத்னம் பேசுகையில்,  மற்ற திரைத்துறை உடன் ஒப்பிடுகையில் மலையாளத் திரையுலகம் மிகவும் பாதுகாப்பற்றது. மலையாளப் படங்கள் பெரும்பாலும் லொகேஷனில் படமாக்கப்படுவதால், நடிகர்கள் மற்ற கலைஞர்கள்  தங்கள் வீடுகளை விட்டு அதிக நேரம் வெளி இடங்களில் இருக்க வேண்டி உள்ளது.

மற்ற தொழில்களுக்கும் திரைத்துறைக்கும் வித்தியாசம் உள்ளது. மற்ற தொழில்களில், தினமும் நீங்கள் வேலைக்குச் சென்றுவிட்டு தினமும் வீட்டிற்கு திரும்புவீர்கள். ஆனால் திரைப்படங்களில் என்ன நடக்கிறது என்றால், சுமார் 200-300 பேர் ஒரு இடத்திற்கு குடிபெயர்ந்து அங்கு ஒரு குடும்பமாக வாழ்கின்றனர்.

இந்த நேரங்களில்,  சில நேரங்களில், விருப்பமாகவோ அல்லது விரும்பாமலோ எல்லை கோடுகள் தாண்டப்படுகிறது என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், “இன்று காலை நான் என் கணவரிடம், இது போன்று தவறாக நடந்து கொள்பவர்களை நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்களை என்  
ஷூட்டிங் தளத்தில் இருந்து வெளியேற்றி விடுவேன். அவ்வாறு ஒருவரை நான் வெளியேற்றி உள்ளேன் என்றார். 

ஆங்கிலத்தில் படிக்க:    Suhasini Maniratnam says Mani Ratnam fired a crew member for ‘crossing the line’ on his set: ‘He said most of the people should be thrown out’

அதோடு, இப்படி செய்ய வேண்டும் என்றால் நாம் இங்கு பெரும்பாலானவர்களை வெளியேற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment