ஆங்கிலத்தில் படிக்க...
இன்றைய காலக்கட்டத்தில் சினிமாவில் பொதுவான அரசியல் இருக்க வேண்டுமா என்ற கேள்வி பலராலும் அதிகம் விவாதிக்கப்படும் ஒரு கேள்வியாக உள்ளது. இது குறித்து பொதுவான நிலை எட்டப்படாத நிலையில், பிரபல இயக்குனர் மணிரத்னத்தின் மனைவியும், நடிகையும் இயக்குனருமான சுஹாசினி மணிரத்னம், நிதி ஆதாயத்திற்காக திரைப்படங்களில் அரசியலைப் பயன்படுத்துவது பாராட்டத்தக்கது அல்ல என்று சமீபத்தில் கருத்து தெரிவித்தார்,.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், இன்று, அரசியல் இல்லாத இந்தியப் படம் இல்லை என்று நான் நினைக்கிறேன், ஏனென்றால் பெரும்பாலான படங்களில் வில்லன் அரசியல்வாதி. உள்ளூர் எம்.எல்.ஏ.வைத்தான் பெரும்பாலும் முதல் வில்லனாக சித்தரிக்கிறார்கள். இருப்பினும், நான் படங்களில் பார்க்க விரும்பும் அரசியல் இந்த சித்தரிப்பு அல்ல. எ வெனஸ்டே(2008), பம்பாய் (1995), ரோஜா (1992), இருவர் (1997) போன்ற படங்கள் நான் பார்க்க விரும்பும் அரசியல்.
இவை அதைன்தும் உண்மையில் அரசியலில் இருந்து பால் கறந்து பணம் சம்பாதிக்கும் படங்கள் அல்ல,” இதுபோன்ற சந்தர்ப்பங்களில், நீங்கள் தவறாக முத்திரை குத்த முயற்சிக்கும் அரசியல்வாதிகளுக்கு உங்களுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை., என்னைப் பொறுத்தவரை, என் சினிமாவில் அது நல்ல அரசியல் அல்ல, ”என்று ஏபிபி நியூஸ் உடனான உரையாடலின் போது தெரிவித்திருந்தார்.
மேலும், தற்போதைய காலகட்டத்தில் இந்தியாவில் அரசியல் படம் தயாரிப்பது கடினம் என்று கூறியுள்ள சுஹாசினி, இன்றைய சூழலில் தில் சே... அல்லது பாம்பே போன்ற ஒரு படத்தை மணிரத்னத்தால் உருவாக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான் என்று கூறியுள்ள சுஹாசினி, ஷபானா ஆஸ்மியின் கருத்துகளையும் நினைவு கூர்ந்து, தற்போதைய சூழல், ஷோலே போன்ற ஒரு திரைப்படம் கூட உருவாக்க முடியாது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
“முன்பு, நீங்கள் எதை பார்த்தாலும் அதை அப்படியே ஏற்றுக்கொண்டீர்கள். ஆனால் இப்போதெல்லாம், அனைவருக்கும் தனிப்பட்ட கருத்து இருக்கிறது. இதனால் வாக்குவாதம் இருப்பதாகத் தெரிகிறது, மேலும் அரசியல் என்பது சர்ச்சைக்குரிய எளிதான தலைப்பு, ”என்று கூறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், ஒருமுறை ஹீரோவின் மடியில் அமர்ந்து அவர் சாப்பிடும் அதே ஐஸ்கிரீமை நக்க வேண்டிய ஒரு காட்சியை செய்ய மறுத்ததையும் பற்றி கூறியிருந்தார். இதுபோன்ற சண்டைகளில் தனியாக இருப்பது கடினம் என்பதால், என்னை ஆதரிக்கும் ஒருவரை எப்போதும் செட்டில் வைத்திருப்பேன் என்றும் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“