ஆங்கிலத்தில் படிக்க...
தனது இயக்கத்தில் 1995-ம் ஆண்டு வெளியான இந்திரா படத்தில் காட்டப்பட்டுள்ள சாதி பாகுபாடு குறித்து பேசியுள்ள நடிகையும் இயக்குனருமான சுஹாசினி மனிரத்னம், தமிழகத்தின் தெற்கில் உள்ள கிராமங்களில் 2 சமூகங்களுக்கு இடையே நடக்கும் மோதல் என்று குறிப்பிட்டுள்ளார்.
1995-ம் ஆண்டு அனு ஹாசன் அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான படம் இந்திரா. நாசர், ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் இரு சமூகங்களுக்கு இடையே நடைபெறும் சாதிய மோதலை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்த படததிற்கு கதை திரைக்கதை எழுதி இயக்கியவர் சுஹாசினி மணிரத்னம்.
காலங்கள் கடந்தாலும் இந்த படம் இப்போதும் பேசப்படும் ஒரு படமாக உள்ளது. இதனிடையே சமீபத்தில் ஏபிபி சதர்ன் ரைசிங் உச்சிமாநாட்டில், இந்திரா ஜாதி பிரச்சினைகளைக் கையாளும் முதல் திரைப்படங்களில் ஒன்றாக உள்ளது. இந்த படத்தை பற்றி கேட்டபோது, நான் அந்தப் படத்தை உருவாக்கிய விதம் எனக்குப் பிடிக்கவில்லை என்று சுஹாசினி கூறியுள்ளார்.
பா ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் ஆகியோர் இது போன்ற படங்களை எடுத்திருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். அவர்கள் அந்த வலிகளை கடந்து வந்திருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். எனவே, அவர்களுக்கு என்ன நடந்தது என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்கள் பிரச்சனைகளை கடந்து சென்றனர். நான் செய்த முயற்சியை விட அவர்களின் படங்கள் உண்மையானவை. நான் எப்போதும் வெளியில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பதால் அந்த பிரச்சனையை ஒரு கமர்ஷியலாக காட்ட விரும்பினேன்.
நான் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வந்தாலும், “நான் அவமானப்படுத்தப்பட்டதில் அல்லது தண்டனை கொடுப்பது தொடர்பான காட்சிகள் வைக்கவில்லை. படத்தில் அதுதான் வித்தியாசமாக இருந்தது. இன்று, இந்த இளைஞர்கள் அந்தக் கருத்துகளாலும் விளக்கங்களாலும் வெற்றியடைந்து வருகின்றனர். அதேசமயம் நான் அதை கமர்ஷியலாக செய்ய முயற்சிக்கிறேன். அந்த நேரத்தில் நான் படத்தை கையாண்ட விதம் எனக்கு கொஞ்சம் வெட்கமாக இருக்கிறது என்று சுஹாசினி குறிப்பிட்டுள்ளார்.
சுஹாசினி கடைசியாக தெலுங்கில் மிஸ்டர் ப்ரெக்னென்ட் படத்தில் நடித்தார். அவர் கடைசியாக அமேசான் ப்ரைமின் புத்தம் புதுக் காலையில் காபி, எவன் உள்ளிட்ட ஆந்தாலஜி படங்களில் சில பாகங்களை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“