/tamil-ie/media/media_files/uploads/2019/02/suhasini-maniratnam-dance.jpg)
suhasini maniratnam dance, நடிகை சுஹாசினி
43 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மேடை ஏறி நடிகை சுஹாசினி பரதநாட்டியம் ஆடியிருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
சென்னையில் பிரபலமான சரசால்யா நடனப்பள்ளியின் 70ம் ஆண்டு வைரவிழா நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்த விழாவில் சுஹாசினி பரத நாட்டியம் ஆடி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
நடிகை சுஹாசினி நடனம்
இதற்கு முன்பு, சுஹாசினி 1976ம் ஆண்டு பரதம் ஆடினார் அதன் பிறகு 43 வருடங்களுக்கு இப்போதுதான் மேடை ஏறி பரத நாட்டியம் ஆடியுள்ளார்.
இது தொடர்பாக சுஹாசினி கூறுகையில், “எனக்கு 13 வயசு இருக்கும் போது பரமக்குடியில இருந்து சென்னைக்கு என்னுடைய சித்தப்பா கமல்ஹாசன் அழைச்சுட்டு வந்தார். நான் என்னோடா சித்தப்பா மற்றும் தாத்தாவுடன் தான் வளர்ந்தேன்.
அப்போது நான் சரசா நடனப்பள்ளியில் தான் பரதம் பயின்றேன். எனக்கு டான்சவிட ஓட்டப்பந்தயம் தான் சிறப்பா வரும். அப்ப என் டீச்சர் ரொம்ப ஸ்டிரக்ட்டா இருப்பாங்க. ஒரு விஷயத்தை நாலு, அஞ்சுவாட்டி செய்ய வைப்பாங்க” என்றார்.
வீடியோ :
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.