கமல் ஹாசனின் விருமாண்டி படம் மூலம் நடிகையானவர் சுஜாதா சிவகுமார். கார்த்தி ஹீரோவாக அறிமுகமான பருத்திவீரன் படத்தில் முத்தழகின் அம்மாவாக நடித்து பிரபலமானார். பாண்டிராஜ் இயக்கிய பசங்க படம் மூலம் சுஜாதாவுக்கு பெயரும் புகழும் கிடைத்தது. அந்த படத்தில் ஜீவாவின் அம்மாவாக நடித்திருந்தார். அஜித், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்டோரின் படங்களில் நடித்திருக்கிறார்.
சுஜாதா சிவகுமார் என்று அமராவதி படம் பார்த்தாரோ அதில் இருந்து அஜித் குமாரின் தீவிர ரசிகையாகிவிட்டார். ரசிகை சும்மா இருக்கவில்லை தனக்கு பிடித்த அஜித்குமாருக்கு காதல் கடிதம் எழுதியிருக்கிறார். படித்த காலத்தில் காதல் கடிதம் எழுதி அதை புத்தகத்தில் வைத்து பார்த்து பார்த்து ஏங்கவில்லை. கடிதம் எழுதிய கையோடு அதை அஜித் குமாருக்கு போஸ்ட் செய்துவிட்டார். ஆனால் அந்த கடிதம் அஜித்தை சேர்ந்ததா இல்லையா என்பது தெரியாமல் இருந்திருக்கிறார். இப்படி தங்களுக்கு பிடித்த நடிகருக்கு காதல் கடிதம் எழுதி அதற்கு பதில் வரவில்லை என ஏங்கிய முதல் ஆள் சுஜாதா சிவகுமார் இல்லை. பல ரசிகைகளுக்கு பதில் கடிதம் வரவில்லை.
அதன் பிறகு சுஜாதாவுக்கு திருமணமாகிவிட்டது. அஜித்துக்கு லவ் லெட்டர் போட்டேங்க என தன் கணவரிடம் அவர் சொல்லவில்லை. இந்நிலையில்தான் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் குமார் ஹீரோவாக நடித்த வீரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு சுஜாதாவுக்கு கிடைத்தது. அவரும் சந்தோஷமாக நடிக்க சென்றிருக்கிறார். அஜித் குமாரை பார்த்ததும் போய் அவரிடம் பேசிவிடவில்லை. பிடித்த மனிதர் கண் முன்பு வந்து நின்றதும் சநதோஷத்தில் தயக்கம் ஏற்பட்டு பேசாமல் இருந்திருக்கிறார். அதன் பிறகு தைரியத்தை வரவழைத்து பேசியவர், ஆமாம் நான் போட்ட கடிதம் வந்ததா என அஜித்திடம் கேட்டிருக்கிறார்.
Unconditional love❤️AK💯
Posted by TamilnaduThalafoundation on Friday, July 18, 2025
வீரம் படத்தை அடுத்து விஸ்வாசம் படத்திலும் அஜித்குமாருடன் சேர்ந்து நடித்தார் சுஜாதா. விஸ்வாசம் படப்பிடிப்பின்போது அஜித் குமார் அனைவருக்கும் தினமும் சாப்பாடு சமைத்துக் கொடுத்ததுடன் சேர்ந்து சாப்பிட்டது சுஜாதாவுக்கு பிடித்துவிட்டது. மதுரையை சேர்ந்த சுஜாதா அவங்க இவங்கனு பேசுவது ரசிகர்களுக்கு பிடிக்கும். பெரிய திரை மட்டும் அல்ல சின்னத்திரையிலும் கவனம் செலுத்துகிறார். மகாநதி சீரியலில் நடித்து வருகிறார். மேலும் சன் டிவியில் ஒளிபரப்பான டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியின் முதல் சீசனின் வின்னர் சுஜாதா சிவகுமார் தான். சுஜாதா இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும் என சொல்லும் அளவுக்கு ஜாலியாக பேசிப் பழகுவார்.