Pandian Stores Dhanam: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் முன்னணி கதாபாத்திரமான தனம் என்ற கேரக்டரில் நடித்து வருபவர் சுஜிதா. இதற்கு முன் பல சீரியல்களிலும், படங்களிலும் நடித்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா
கேரளாவின், திருவனந்தபுரத்தில் பிறந்த சுஜிதா, இயக்குநர் கே.பாக்யராஜ் இயக்கிய ‘முந்தானை முடிச்சு’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு சத்யராஜின் ’பூவிழி வாசலிலே’, ரஜினியின் ‘மனிதன்’, மம்மூட்டியின் ‘அழகன்’ உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். ‘வாலி’, இருவர்’, ’பள்ளிக்கூடம்’, ‘தாண்டவம்’, ‘தியா’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்
மாதவன், மம்மூட்டி, மோகன்லால், நாகார்ஜுனா அக்கினேனி, நந்தமுரி பாலகிருஷ்ணா போன்ற பிரபல நடிகர்களுடனும் திரையைப் பகிர்ந்துள்ளார் சுஜிதா. தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘ஒரு பெண்ணின் கதை’ நாடகம் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான சுஜிதா, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 30-க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார்.
குழந்தை தன்வினுடன் சுஜிதா
சுஜிதா விளம்பர துறையைச் சேர்ந்த தனுஷ் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை உள்ளது. மறைந்த மூத்த பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் சுஜிதாவுக்கு மிகவும் நெருக்கம். அடிக்கடி ஸ்ரீநிவாஸை சுஜிதாவும், அவரது கணவரும் சென்று சந்திப்பார்களாம். ஆனால் பி.பி.ஸ்ரீநிவாஸ் உடல் நலக்குறைவால் இறந்தபோது, நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சுஜிதாவால், தனது இறுதி மரியாதையை செலுத்த முடியவில்லையாம். தன் மகனை ஸ்ரீநிவாஸிடம் காட்டி ஆசீர்வாதம் வாங்க நினைத்து, அது முடியாமல் போனதில் மிகுந்த வருத்தப்பட்டிருக்கிறார். இருப்பினும் பாடகர் ஸ்ரீநிவாஸை, மகன் தன்வின் ரூபத்தில் பார்க்கிறார்களாம் சுஜிதாவும், அவரது கணவர் தனுஷும்.
சீரியல் நடிகை சுஜிதா தனுஷ்
தவிர, மலையாள திரைப்பட இயக்குனர் சூர்யா கிரண் சுஜிதாவின் சகோதரர். அவர் காசி, சமுத்திரம் உள்ளிட்டப் படங்களில் நடித்த கல்யாணியை திருமணம் செய்துள்ளார்.