விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் சீரியலின் 2ம் பாகத்தில் தான் நடிக்கவில்லை என்று நடிகை சுஜிதா கூறினார்.
நடிகை சுஜிதா பல்வேறு சீரியலில் நடித்தாலும், அவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நல்ல பெயரை வாங்கிகொடுத்தது. பலரும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியாலை ஆர்வமுடிடன் கண்டு ரசித்தானர்.
குறிப்பாக நடிகை சுஜிதாவின் கதாபாத்திரத்திற்கு பலரும் விசிறியாக உள்ளனர். இந்நிலையில் தற்போது அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸின் இரண்டாவது பாகத்தில் இவர் நடிப்பாரா ? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் தான் நடிக்கப்போவதில்லை என்று கூறி உள்ளார். முதல் பாகத்தில் தான் தான் வீட்டில் மூத்த அண்ணி, கொழிந்தனார்கள் மற்றும் அவர்களது மனைவி பற்றி கதை இருக்கும். ஆனால் இரண்டாம் பாகத்தில் நான் அம்மாவாக நடிக்க வேண்டும். எனக்கு மகன்கள் இருப்பது போன்ற கதை இருக்கும். மூத்த மகளுக்கு திருமணம் முடிந்து குழந்தை இருக்கும். இதனால் எனக்கு அது சரி வரும் என்று தோன்றவில்லை.
விஜய் டீவியிலிருந்து பல சலுகைகள் , தருவதாகவும், கதையை கூட மாற்றுகிறோம் என்றார்கள். அவர்களுக்கு தனம் மற்றும் மூர்த்தி போன்ற மீண்டும் ஒரு ஜோடியை கொண்டு வர வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால் என் மனத்திற்கு பிடிக்கவில்லை. பல வழியில் என்னிடம் பேசி, இதில் நடிக்க வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால் எனக்கு பிடிக்கவில்லை என்பதால் மறுத்துவிட்டேன்.