சன் டிவி சீரியல் வில்லிக்கு அடிச்சது லக்... திரிஷா படத்தில் முக்கிய வேடமாம்!
Cinema News in Tamil :புத்தாண்டான இன்று, ஓடிடி தளங்களில் வெளியாகி இருக்கும் ‘பரமபதம் விளையாட்டு’ திரைப்படத்தில் சங்கீதா முக்கிய கதாபாத்திரத்திக் நடித்துள்ளார்.
சின்னத்திரை நட்சத்திரங்கள் வெள்ளித்திரையில் ஜொலிப்பது, எட்டாக்கனியாக இருக்கும் வேளையில், சிலருக்கு அடிக்கும் லக் ரசிகர்களான நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. சன் மியூசிக் தொலைக்காட்சியில் வி.ஜே வாக வலம் வந்து கொண்டிருந்த சின்னத்திரை நடிகை சங்கீதாவுக்கு தான் திரிஷா படத்தில் முக்கிய ரோலில் நடிக்க லக் அடித்திருக்கிறது.
Advertisment
சன் மியூசிக்கில் விஜே வாக பணியாற்றிய போதே, சன் டிவியில் ஒளிபரப்பானா அழகு சீரியலுக்கு அழைப்பு வர, சின்னத்திரைக்குள் எண்ட்ரி கொடுத்தார் சங்கீதா. அழகு நாடகத்தில், தமிழ் சீரியல் ரசிகர்களே பிரமிக்கும் வகையில் வில்லி கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். பின், அன்பே வா சீரியலின் மூலமாகவும் பெருவாரியான நேயர்களை சென்றடைந்தார்.
இந்நிலையில், திரிஷா நடிப்பில் சித்திரை புத்தாண்டான இன்று, ஓடிடி தளங்களில் வெளியாகி இருக்கும் ‘பரமபதம் விளையாட்டு’ திரைப்படத்தில் சங்கீதா முக்கிய கதாபாத்திரத்திக் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் அவர் நடித்துள்ளது, தனக்கு எவ்வளவு முக்கியமான தருணம் என்பது குறித்து, ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisement
அவரது ட்விட்டர் பதிவில், ‘எனது முதல் படமே, கோலிவுட்டில் பிரபல நாயகியாக வலம் வரும் திரிஷாவுடன் பரமபதம் விளையாட்டு படத்தில், முக்கிய ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ் புத்தாண்டான இன்று பரமபதம் விளையாட்டு திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளிவருவது மகிழ்ச்சியை தருகிறது.அனைவரும் படத்தை பார்த்து கருத்து தெரிவியுங்கள், என குறிப்பிட்டிருந்தார்.
சின்னத்திரையில் சங்கீதாவை கொண்டாடிய ரசிகர்கள் இப்போது, வெள்ளித்திரையில் எண்ட்ரி கொடுத்திருக்கும் அவருக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் அவரது இன்ஸ்டாகிராம் பதிவின் கீழ் கமெண்ட் செய்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“