கண்ணான கண்ணே சீரியலில் நடிக்கும் நித்யா தாஸ் தன் மகளுடன் எடுத்துக் கொண்ட போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் கண்ணான கண்ணே சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் நிமிஷிகா மற்றும் ராகுல் ரவி முதன்மை கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த சீரியலில் யமுனா என்ற சித்தி கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் நித்யா தாஸ்.
நித்யா தாஸ், மலையாளம் மற்றும் சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் அழகு மற்றும் அன்பே வா உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
நித்யா தாஸூக்கு நைனா சிங் என்ற மகளும் நமன் சிங் என்ற மகனும் உள்ளனர். நித்யா தாஸ் இளமையான தோற்றத்தில் இருந்தாலும் சீரியலில் அம்மாவாகவும் சித்தியாகவும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தனது மகளுடன் ஒரு பத்திரிக்கைக்கு கொடுத்துள்ள போட்டோஷூட் படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. நித்யா தாஸ் இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil