சன் டிவி அன்பே வா சீரியலில் கதாநாயகிக்கு தங்கையாக நடிக்கும் நடிகை அக்ஷிதா மாற்றப்பட்டுள்ளார்.
சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் பெரும்பாலான சீரியல்கள் தமிழ் ரசிகர்களில் பெரிதும் விரும்பி பார்க்கப்படுகின்றன. அந்த வகையில் சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் அன்பே வா சீரியலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. டிஆர்பி ரேட்டிங்கிலும் இந்த சீரியல் முன்னிலையில் இருந்து வருகிறது.
இந்த சீரியலில் டெல்னா டேவிஸ் மற்றும் விராத் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் ரேஷ்மா, கண்யா பாரதி உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அன்பே வா சீரியலில் ஹீரோயின் பூமிகாவின் தங்கை தீபிகாவாக நடிப்பவர் மாற்றப்பட்டுள்ளார். இதுவரை தீபிகா கதாப்பாத்திரத்தில் அக்ஷிதா நடித்து வந்தார். தற்போது அக்ஷிதா மாற்றப்பட்டு, புதிதாக ஒரு நடிகை நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அக்ஷிதா என்ன காரணத்திற்காக சீரியலில் இருந்து மாற்றப்பட்டுள்ளார் என்பது தெரியவில்லை. அக்ஷிதா, விஜய் டிவியின் ஹிட் சீரியல்களில் ஒன்றான காற்றுக்கென்ன வேலி சீரியலில் ஹீரோவுக்கு தங்கையாக நடித்து வருகிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil