கல்யாணம் பற்றி கேட்பதை இனியாவது விடுங்கப்பா… சக நடிகருடன் காதலை அறிவித்த விஜய் டிவி நடிகை!

Sun TV and Vijay TV serial actress Chandra lakshmanan going to marry her co star: சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல் நடிகை சந்திரா லக்‌ஷமணுக்கு, சக நடிகருடன் திருமணம்; வைரலான இன்ஸ்டாகிராம் பதிவு

திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகை சந்திரா லக்‌ஷ்மண், சக நடிகர் டோஷ் கிறிஸ்டி என்பவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளார்.

தமிழில் ’மனசெல்லாம்’ படத்தில் நடித்ததன் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர் சந்திரா. பின்னர் ’ஏப்ரல் மாதத்தில்’, தில்லாலங்கடி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம் சினிமாவிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

சின்னத்திரையை பொறுத்தவரை மலையாளத்தில் ’ஸ்வந்தம்’ சீரியலில் அறிமுகமான சந்திரா, 20க்கும் மேற்பட்ட மலையாள சீரியல்களில் நடித்துள்ளார். சந்திரா, தமிழ் சின்னத்திரையில் ’கோலங்கள்’ சீரியல் மூலம் அறிமுகமானார். பின்னர் ’காதலிக்க நேரமில்லை’, ’மகள்’, ’சொந்தபந்தம்’, ’பாசமலர்’ உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார். விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்துக் கொண்டுள்ளார்.

தற்போது இவர் முன்ன்னி கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் மலையாள சீரியலான ‘ஸ்வந்தம் சுஜாதா’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று 2020 முதல் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் நடித்து வரும் சக நடிகர் டோஷ் கிறிஸ்டி என்பவரை திருமணம் செய்துக் கொள்ளப்போவதாக சந்திரா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சந்திரா மற்றும் டோஷ் கிறிஸ்டி இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரு கைகள் கோர்த்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். மேலும் அதில், ’ஆம்! இதைத்தான் இருவரும் சொன்னோம், எங்களின் குடும்பங்களின் சம்மதத்தோடும் ஆசீர்வாதத்தோடும் நாங்கள் ஒரு புதிய பயணத்தை தொடங்குகையில், எங்கள் நலம் விரும்பிகளான உங்களை எங்கள் மகிழ்ச்சியில் சேர்க்க விரும்புகிறோம், என் திருமணம் பற்றிய எல்லையற்ற கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன், எங்களை ஆசீர்வதித்து உங்கள் பிரார்த்தனையில் எங்களை வைத்திருங்கள், தொடர்ந்து பதிவிடுங்கள்’ என பதிவிட்டுள்ளனர்.

இவர்களுக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sun tv and vijay tv serial actress chandra lakshmanan going to marry her co star

Next Story
பவர் ஸ்டாருடன் 3-வது திருமணம்… பங்களா… பேய்… மிரட்டலான வேடத்தில் வனிதா!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com