அழகு: அம்மாவும் தங்கச்சியும் தான் நம்மள இவ்ளோ கஷ்டப்படுத்துனாங்கன்னு சுதா எப்போ தான் தெரிஞ்சுக்குவாளோ…

Sun TV's Azhagu serial: சகுந்தலாவின் மூத்த மகள் சுதா. இந்த உண்மை இப்போது வரையில் உடைக்கப்படவில்லை.

By: August 23, 2019, 11:42:13 AM

Azhagu Serial: நடிகை ரேவதி முன்னணி கதாப்பாத்திரமாக நடிக்கும் ‘அழகு’ சீரியல் சன் டி.வி-யில் ஒளிபரப்பாகி வருகிறது.

ரவியை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறாள் பூர்ணா. ஆனால் எங்கிருந்தோ வந்த ரவியின் நண்பன் இறந்து விட, சந்தர்ப்ப சூழ்நிலையால், அவனது மனைவியை திருமணம் செய்துக் கொள்கிறான் ரவி. ரவியின் தம்பியை திருமணம் செய்துக் கொள்கிறாள். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், இந்தியாவிலேயே பெரிய வக்கீலான சகுந்தலா தேவி தனது 2 மகள்களையும் குழந்தைகளாக தொலைத்து விடுகிறார். பேர், புகழ், பணம் இருந்தும் குழந்தைகளை தொலைத்து விட்டதால் சந்தோஷம் இல்லாமல் அவர்களை தேடிக் கொண்டிருக்கிறார். பின்னர் திருமணமான இளைய மகள் பூர்ணாவை (வில்லி), கண்டுபிடித்து விடுகிறார். சகுந்தலாவின் மூத்த மகள் சுதா. இந்த உண்மை இப்போது வரையில் உடைக்கப்படவில்லை. ஆகவே பூர்ணாவும், சகுந்தலாவும் சேர்ந்து சுதாவையும், அழகம்மை குடும்பத்தையும் ஆட்டிப் படைக்கிறார்கள்.

சகுந்தலா தேவியின் மகன் மதன், பூர்ணாவின் நாத்தனார் காவ்யாவை காதல் கல்யாணம் செய்துக் கொள்ள, பூர்ணாவுக்கும், சகுந்தலாவுக்கும் சகுனி வேலைகள் செய்வது இன்னும் எளிமையாகி விட்டது. அம்மா வீட்டுக்குப் போய் திருந்தி வந்தவள் போல இருந்த பூர்ணா, ரவியை பைத்தியமாக்கும் முயற்சியில் இறங்குகிறாள். இதனைக் கண்டுக் கொண்ட சுதா, தன் கணவனை காப்பாற்றி விடுகிறாள்.

பூர்ணாவின் போன் பேச்சை கேட்டுவிட்டு அழகம்மை துடித்துப் போக, தான் அப்படி பேசவே இல்லை என சாதிக்கிறாள் பூர்ணா. மனைவிக்கு சப்போர்ட் செய்து அப்பா, அம்மாவிடம் சண்டைக்குப் போகிறான் மகேஷ், இதனால் அவன் தம்பிக்கும் அவனுக்கும் தகராறு ஏற்படுகிறது. அண்ணன் – தம்பி அடித்துக் கொள்வதைப் பார்த்து உள்ளுக்குள் ரசிக்கிறாள் பூர்ணா.

அம்மாவும், தங்கையும் தான் தன்னை இப்படியெல்லாம் செய்தார்கள் என்ற உண்மை தெரிய வரும் போது சுதா எப்படி ரியாக்ட் பண்ணுவாளோ..!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Sun tv azhagu serial azhagammai sudha poorna

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X