சட்டப்படி அர்ச்சனாவை விவாகரத்து செய்றதுக்குள்ள இப்படியொரு முடிவா திருநா?

எப்படியாவது பேசி அவர்களை ஒன்று சேர்த்து வைக்கலாம் என்ற போது, நிவியை கல்யாணம் செய்துக் கொள்ளுமாறு திருநாவை உசுப்பேத்துகிறாள் பூர்ணா

எப்படியாவது பேசி அவர்களை ஒன்று சேர்த்து வைக்கலாம் என்ற போது, நிவியை கல்யாணம் செய்துக் கொள்ளுமாறு திருநாவை உசுப்பேத்துகிறாள் பூர்ணா

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sun TV Azhagu serial

Sun TV Azhagu serial

Azhagu Serial : சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘அழகு’ சீரியல், அழகம்மை என்ற ரேவதியின் கதாபாத்திரத்தை முதன்மையாகக் கொண்டது. ஆனால் பாருங்கள் அவர் சீரியலில் தலைக்காட்டி கிட்டத்தட்ட மாதக் கணக்காகிறது. அவர் ஊரில் இருக்கிறார் என்றே அவ்வப்போது சொல்லி வருகிறார்கள்.

Advertisment

க்ரைம் த்ரில்லர் ‘மாஃபியா’: ரிலீஸன்றே வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்

சரி அது இருக்கட்டும். கால் நடக்க முடியாதது போல வீட்டினரை ஏமாற்றும் பூர்ணா, நிவியை கல்யாணம் செய்துக் கொள்ளுமாறு திருநாவை மூளை சலவை செய்கிறாள். நிவியுடன் ஓட்டலில் திருநாவை பார்த்ததால் அதிர்ச்சியான அர்ச்சனாவின் பெற்றோர்கள் அவளை திருநா வீட்டுக்கு அனுப்ப மாட்டோம் என்கிறார்கள். இதற்கிடையே சமாதானம் செய்யப் போன சுதாவையும் திட்டிவிட்டு, விவாகரத்துப் பேப்பரை கையில் கொடுக்கிறார்கள்.

Advertisment
Advertisements

சரி எப்படியாவது பேசி அவர்களை ஒன்று சேர்த்து வைக்கலாம் என்ற போது, நிவியை கல்யாணம் செய்துக் கொள்ளுமாறு திருநாவை உசுப்பேத்துகிறாள் பூர்ணா. வேண்டாம் வேண்டாம் என நிவி எவ்வளவோ சொல்லியும், அதைக் கொஞ்சம் கூட காதில் வாங்கிக் கொள்ளாத திருநா, அவள் கழுத்தில் தாலி கட்டி வீட்டுக்குக் கூட்டி வருகிறான். இதனால் வீட்டிலிருப்பவர்கள் அதிர்ச்சியாகிறார்கள்.

சோதனைக்கும் ஒரு எல்லை உண்டு – முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா சரிந்த ‘குட்டிக் கதை’

இது ஒருபுறம் இருக்க, வருமானவரி சோதனையில் வில்லனிடம் கிடைத்த ஆதாரங்களை கைப்பற்றுகிறான் ரவி. அந்த ஃபைலை கேட்டு பணத்துடன் வீட்டுக்கு வந்த வில்லனை திட்டி அனுப்பி விடுகிறார்கள். இந்த சூழலை பயன்படுத்திக் கொண்ட பூர்ணா, லஞ்சம் வாங்கியதாக ரவியை அவன் அதிகாரியிடம் மாட்டி விடுகிறாள். என்ன தான் தங்கச்சியாக இருந்தாலும், அவள் செய்யும் அட்டூழியங்களுக்கு தக்க பதிலடி கொடுக்காமல், திருத்துகிறேன் என வசனம் பேசும் சுதா பார்வையாளர்களை அலுக்க செய்கிறாள்.

Sun Tv Tv Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: