/tamil-ie/media/media_files/uploads/2019/09/DSC02610-31.jpg)
sun tv Azhagu serial today
sun tv Azhagu serial today : சன் டிவியில் அனைவராலும் அதிகம் பார்க்கப்படும், குடும்ப சீரியலான அழகு சீரியலில் வில்லி பூர்ணா ஜெயிலுக்கு செல்வது தான் ஹைலைட் ஆஃப த டே.
அழகம்மையின் குடும்பம் இந்த நிலைமைக்கு வர பூர்ணா தான் காரணம் என்பது அனைவருக்கும் தெரிந்து விட்டது. ரவியை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு கடைசியில் இரண்டாவது அத்தை மகனை திருமணம் செய்துக் கொண்டு அழகு குடும்பத்திற்கு இரண்டாவது மருமகளாகிறாள் பூர்ணா.
அப்போதிலிருந்து சுதாவை கண்டாலே பூர்ணாவிற்கு பிடிக்காமல் போகிறது. அழகு குடும்பத்தில் செல்ல மருமகளாகிறார் சுதா. இதை நினைத்து தினம் தினம் பொங்குகிறார் பூர்ணா. இந்தியாவிலேயே பெரிய வக்கீலான சகுந்தலா தேவி தனது 2 மகள்களையும் குழந்தைகளாக தொலைத்து விடுகிறார். பேர், புகழ், பணம் இருந்தும் குழந்தைகளை தொலைத்து விட்டதால் சந்தோஷம் இல்லாமல் அவர்களை தேடிக் கொண்டிருக்கிறார்.பின்னர் திருமணமான இளைய மகள் பூர்ணாவை சகுந்தலா கண்டுப்பிடிக்க சில நாட்கள் கழித்து சுதா தான் அவரின் மூத்த மகள் என்ற உண்மையும் புலப்படுகிறது.
இதுஒருபுறம் இருக்க, தனது அக்கா தான் சுதா என்ற உண்மை பூர்ணாவிற்கு தெரிந்து விடுகிறது. இதை சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாத பூர்ணா கூலிப்படையை ஏவி சுதாவை தீர்த்துக் கட்ட முடிவு செய்கிறார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அதிலிருந்து மீண்டும் சுதா போலீஸில் புகார் அளிக்கிறார். அதன் அடிப்படையில் பூர்ணாவை கைது செய்து சிறையில் அடைகிறார்கள் மகளிர் காவலர்கள். இனிமேல் என்ன நடந்தாலும், சுதா, பூர்ணாவை யாராலும் சேர்த்து வைக்க முடியாது.
Thirumanam promo:
சந்தோஷை காப்பாற்ற போன இடத்தில் ஜனனி மீது பாய்கிறது குண்டு. மொத்த குடும்பமும் இப்போது ஆஸ்பதிரியில் ஜனனி உயிர் பிழைக்க வேண்டும் என்று போராடுகிறது. இது ஒருபுறம் இருக்க ஆப்ரேஷ்ன் செய்தால் தான் உயிர் பிழைப்பார் ஜனனி அதுவும் பாதி வாய்ப்பு தான் என்றாகி விட்ட நிலையில் கோயிலுக்கு சென்று ஜனனிக்காக பிராத்தனை செய்கிறார் சந்தோஷ்.
மருமகளுக்காக மாமனாரும் கடவுளின் பிராத்தனை செய்கிறார். ஜனனி உயிர் பிழைக்க வேண்டும் என்பது தான் ஒட்டு மொத்த குடும்பத்தின் வேண்டுதலும். இதையெல்லாம் பார்த்து வயிறு வெடித்து சாகிறார்கள் மாயா மற்றும் சக்தி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.