Advertisment

கவினுக்கு ஆபத்து... டாக்டர் அப்படி என்ன சொன்னார்? சித்தி 2 ட்விஸ்ட்

Sun TV Chithi 2 serial new promo kavin life in danger: சன் டிவி சித்தி 2 சீரியல் நியூ ப்ரோமோ; கவினுக்கு என்ன ஆச்சு என ரசிகர்கள் கவலை!

author-image
WebDesk
New Update
கவினுக்கு ஆபத்து... டாக்டர் அப்படி என்ன சொன்னார்? சித்தி 2 ட்விஸ்ட்

சன் டிவி வெளியிட்டு இருக்கும் சித்தி 2 சீரியலின் புதிய ப்ரோமோ கவினுக்கு என்ன ஆச்சு என தெரிந்துக்கொள்ள ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டியுள்ளது.

Advertisment

சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சித்தி 2 சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ரசிகர்களின் மனதைக் கொள்ளைக் கொண்ட நந்தன் மற்றும் ப்ரீத்தி ஷர்மா ஜோடி இந்த சீரியலில் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்தநிலையில், சித்தி 2 சீரியல் பரப்பரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சன் டிவி வெளியிட்டு இருக்கும் புது ப்ரோமோவில், வீட்டுக்கு லேட்டாக வரும் கவினிடம் என்ன ஆச்சு என பதறியவாறே கேட்கிறாள் வெண்பா. மூச்சு விடவே முடியலை, பைக்கிலிருந்து கீழே விழுந்துவிட்டதாக சொல்லும் கவின், டாக்டர் டெஸ்ட் பண்ணி பார்த்துட்டு இந்த பிரிஸ்கிரிப்ஷனை எழுதிக் கொடுத்துள்ளதாகவும், எனக்கு என்ன பிரச்சனை என இதில் எழுதியிருப்பதாகவும் கூறுகிறான். அதை வாங்கி பார்க்கும் வெண்பா அதிர்ச்சியாகிறாள். அப்படி டாக்டர் என்னதான் எழுதிக் கொடுத்தார் என தெரிந்துக் கொள்ள முழு எபிஷோடுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

மேலும் ஒரு ரசிகர், ’ப்ளீஸ் சார் கவின் வெண்பா ரொம்ப கஷ்டப்படுற மாதிரி வேண்டாம்’ என இயக்குனருக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.

இன்னொரு ரசிகர் ‘என்னப்பா இது புது ட்விஸ்ட்டா இருக்கு, கவின் உண்மையாலுமே சொல்றாரா இல்ல பொய்யா’ என சந்தேகத்தைக் கிளப்பியுள்ளார்.

இன்னொருவர்’ இது என்ன புதிய இம்சை..... டைரக்டர் சார் நீங்கள் அவர்களை சாதாரணமாக கூட வாழவிடமாட்டீர்களா.... மாற்றிதொலையும் ஐயா உங்களை..... என இயக்குனரையே மாற்றிச் சொல்லியுள்ளார்.

ஒரு ரசிகரோ, உன்னோட காதல்தான் மருந்து என வெண்பாவிடம் கவின் சொல்வார் என்று பதிவிட்டுள்ளார்.

சிலரோ பயப்படுற மாதிரி ஒன்றும் இருக்காது, கவின் சும்மா விளையாடுறாரு என்று பதிவிட்டு வருகின்றனர்.

எப்படி இருந்தாலும், முழு எபிஷோடும் வெளியானதால் தான் இந்த சஸ்பென்ஸூக்கான விடை கிடைக்கும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sun Tv Chithi 2 Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment