புதிய சீரியலில் ‘தெய்வமகள்’ அண்ணியார்: உடன் நடிப்பது யாரெல்லாம் பாருங்க!

சன் டிவியில் ஒளிபரப்பான ‘தெய்வமகள்’ தொடரில் அண்ணியார் காயத்ரியாக நடித்து பிரபலமான ரேகா கிருஷ்ணப்பா புதிய சீரியலில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய சீரியலில் அண்ணியார் ரேகாவுடன் பிரபல சீரியல் நடிகர், நடிகைகள் பலரும் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

sun tv deivamagal serial fame rekha krishnappa, actress rekha krishnappa acting in new serial, தெய்வமகள் சீரியல் நடிகை ரேகா கிருஷ்ணப்பா, தென்றல், தென்றல் சீரியல், தெய்வமகள், விஜய் டிவி, சன் டிவி, தீபக் தினகர், vijay tv, thendral serial fame deepak dinkar acting in new serial, tamil serial news, tamil tv serial news

சன் டிவியில் ஒளிபரப்பான ‘தெய்வமகள்’ தொடரில் அண்ணியார் காயத்ரியாக நடித்து பிரபலமான ரேகா கிருஷ்ணப்பா புதிய சீரியலில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய சீரியலில் அண்ணியார் ரேகாவுடன் பிரபல சீரியல் நடிகர், நடிகைகள் பலரும் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சன் டிவியில் 2013 முதல் 2018 வர ஒளிபரப்பான ‘தெய்வமகள்’ சீரியல் ரசிகர்களால் மறக்க முடியாத சீரியல்களில் ஒன்று. அதற்கு காரணம், ‘தெய்வமகள்’ சீரியலில் வில்லியாக அண்ணியாராக காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரேகா கிருஷ்ணப்பாதான். அவருடைய வில்லத்தனமான நடிப்பு ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்தது. வில்லியாக அதகளம் செய்தார் என்று சொல்லலாம். பிறகு, சன் டிவியில் தொடங்கிய சீரியலில் நடித்தாலும் அவருக்கு அந்த சீரியல் பெரிய அளவில் புகழைக் கொடுக்கவில்லை.

இந்த நிலையில், நடிகை ரேகா கிருஷ்ணப்பா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் டிவியில் புதியதாக தொடங்க உள்ள தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் நடித்து வருகிறார். அவருடன், சன் டிவியில் ஒளிபரபான தென்றல் சீரியல் மூலம் பிரபலமான தீபக் நடிக்கிறார்.

தீபக் தினகர்

நடிகர் தீபக் தினகர் சன் டிவியில் தென்றல் சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதற்குப் பிறகு அவர் சன் டிவி, ஜெயா டிவி, ராஜ் டிவி ஆகியவற்றில் அண்ணி, கீதாஞ்சலி, மனைவி, செல்வி, பந்தம், அரசி, திருமதி செல்வம், ரோஜா கூட்டம் என்று இதுவரை 30-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது அவர் ஜீ தமிழ் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். அதோடு, தண்ணில கண்டம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த சூழலில் நடிகர் தீபக் 11 ஆண்டுகள் கழித்து சீரியலில் நடிக்க களம் இறங்கியுள்ளார். இவர்களுடன் நக்‌ஷத்ரா நாகேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ரேகா, தமிழும் சரஸ்வதியும் என்று பெயரிடப்பட்டுள்ள புதிய சீரியலில் தெய்வமகள் புகழ் அண்ணியார் ரேகா, தென்றல் தீபக், நக்‌ஷத்ரா நாகேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த சீரியலை இயக்குனர் குமரன் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே தென்றல் சீரியலை இயக்கியுள்ளார். இந்த சீரியல் விஜய் டிவியில் ஏப்ரல் மாதம் முதல் ஒளிபரப்பாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

ரேகா கிருஷ்ணப்பா தான் புதிய சீரியலில் நடிப்பதை தெரிவிக்கும் விதமாக, ‘அதே குழு விரைவில் மகிழ்விக்க வருகிறது’ என்று குறிப்பிட்டு தற்போது சீரியல் குழுவினருடன் எடுத்துக் கொண்ட படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sun tv deivamagal serial fame rekha krishnappa acting in new serial with deepak dinkar

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express